மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளில் பணியாற்றிய ஊழியர்களுக்கு பணிமூப்பு அடிப்படையில் வேலை: தொமுச வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 500 டாஸ்மாக் கடைகளில் பணியாற் றிய ஊழியர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் என்று தொமுச தொழிற்சங்கத்தின் டாஸ்மாக் பிரிவு வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக தொமுச டாஸ்மாக் பிரிவு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது:

தொமுச தொழிற்சங்கத்தின் டாஸ்மாக் பிரிவு நிர்வாகிகளின் செயற்குழுக் கூட்டம் சென்னை கலைஞரகத்தில் இன்று (நேற்று) நடந்தது. இக்கூட்டத்தில், தொமுச தலைவர் பேரூர் ஆ.நடராசன், பொதுச் செயலாளர் மு.சண்முகம், தொமுச டாஸ்மாக் பிரிவு தலைவர் ஆ.ராசவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் திருவாரூர் தொகுதியில் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திமுக தலைவர் கருணாநிதிக்கும், எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்றுள்ள திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

மேலும், ‘தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 500 கடைகளில் பணியாற்றிய ஊழியர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் மாற்றுப்பணி வழங்க வேண்டும் என்று அரசு கூறியது. ஆனால், விருப்பு, வெறுப்புகளின் அடிப்படையில் மாற்றுப்பணி வழங்கப்படுகிறது. எனவே, அரசாணைப்படி முறையாக பணி மூப்பின் அடிப்படையில் மாற்றுப்பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

46 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்