இந்தியா - இலங்கை சிறைகளில் உள்ள 103 மீனவர்களை விரைவில் விடுதலை செய்ய முடிவு: கொழும்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு

By செய்திப்பிரிவு

இந்தியா, இலங்கை அரசின் உயர் அதிகாரிகள் கொழும்பில் நடத்திய பேச்சுவார்த்தையில் இரு நாட்டு சிறைகளில் உள்ள 103 மீனவர்களை விடுதலை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையினர் சுட்டதில் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ உயிரிழந்தார். சரோன் என்பவர் படுகாயம் அடைந்தார். இந்த சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் வரை உயிரிழந்த மீனவர் பிரிட்ஜோ உடலை வாங்க மாட்டோம் எனக் கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கொழும் பில் இந்தியா, இலங்கை உயர் அதிகாரிகள் ஆலோ சனைக் கூட்டம் நேற்று நடை பெற்றது.

இலங்கைக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சாந்து, இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மகிந்தா அமரவீரா ஆகியோர் மற்றும் இரு நாட்டு உயர் அதிகாரிகள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் தங்கச்சிமடம் மீனவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம் பவத்தால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பதற்றம் தொடர்பாக நீண்ட நேரம் விவாதிக்கப் பட்டது.

பதற்றத்தை தணிக்க..

பின்னர் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை சற்று தணிக்கும் நோக்கத்தில் இந்தியா - இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க பரஸ்பர முடிவு எடுக்கப்பட்டது.

இந்த முடிவின் அடிப்படையில் இலங்கை சிறையில் உள்ள 84 தமிழக மீனவர்களும், இந்திய சிறையில் உள்ள 19 இலங்கை மீனவர்களும் விரைவில் விடுதலை செய்யப்பட உள்ளனர்.

இலங்கை மறுப்பு

இதனிடையே தமிழக மீனவர் கள் மீது இலங்கை கடற்படை யினர் துப்பாக்கிச் சூடு நடத்த வில்லை என இலங்கை கடற் படை மறுத்துள்ளது. மேலும், இதுகுறித்து விசாரிக்க உயர் நிலை குழு அமைக்கப் பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் நிலவும் பதற்றத்தை தணிப்பதற்காக இலங்கை அரசு இந்த நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

வணிகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

தொழில்நுட்பம்

5 hours ago

சினிமா

6 hours ago

க்ரைம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

7 hours ago

க்ரைம்

7 hours ago

மேலும்