பேரறிவாளன் தாக்கப்பட்ட சம்பவம்: 2 கைதிகள் சிறை மாற்றம்

By செய்திப்பிரிவு

வேலூர் மத்திய சிறையில் பேரறி வாளன் தாக்கப்பட்ட சம்பவத்தில், ராஜேஷ்கண்ணா உள்ளிட்ட 2 பேர் வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன் வேலூர் மத்திய சிறையில் உயர் பாது காப்பு தொகுதியில் அடைக்கப்பட் டுள்ளார். இதே தொகுதியில் மதுரையைச் சேர்ந்த ஆயுள் கைதி ராஜேஷ்கண்ணா என்பவரும் இருந்தார். கடந்த 13-ம் தேதி காலை பேரறிவாளனை இரும்புக் கம்பியால் ராஜேஷ்கண்ணா தாக்கினார். இதில், படுகாயம் அடைந்த பேரறிவாளன் சிகிச்சை பெற்று தொடர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளார்.

இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக வேலூர் சரக சிறைத் துறை டிஐஜி முகமது அனீபா இருவரிடமும் தனித்தனியாக விசா ரணை நடத்தி, அரசுக்கு அறிக்கை அனுப்பினார். இந்நிலையில், பேரறிவாளனைத் தாக்கிய ராஜேஷ்கண்ணா கடலூர் மத்திய சிறைக்கு நேற்று காலை மாற் றப்பட்டார். சிறையில் அவரது நெருங்கிய கூட்டாளியாகக் கருதப் படும் செல்வம் என்பவர் சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.

இதுகுறித்து, சிறைத்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘உயர் பாதுகாப்பு தொகுதியில் உள்ள ராஜேஷ்கண்ணா, செல்வம், கூள நாகராஜன் ஆகியோர் நண் பர்கள். ஏற்கெனவே, பல குற்றச் சாட்டுகளின் அடிப்படையில் கூள நாகராஜன், ராஜேஷ்கண்ணா ஆகியோரை 6-வது தொகு திக்கு இடமாற்றம் செய்ய திட்ட மிடப்பட்டது. இதற்கு பேரறி வாளன்தான் காரணம் என்று நினைத்து, ராஜேஷ்கண்ணா தாக்கியுள்ளார்.

தாக்குதல் நடத்திய ராஜேஷ் கண்ணாவுக்கு பல விதங்களில் இருவரும் உதவி செய்திருக்க வாய்ப்பு உள்ளது. எனவே, 3 பேரையும் பிரிக்க முடிவு செய்யப்பட்டு, 2 பேரை வேறு சிறைகளுக்கு மாற்ற நடவடிக்க எடுக்கப்பட்டது’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 mins ago

வணிகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தொழில்நுட்பம்

2 hours ago

சினிமா

3 hours ago

க்ரைம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

க்ரைம்

5 hours ago

மேலும்