பாஜக கூட்டணியை ஆதரித்து இன்று வைகோ பிரச்சாரம்

By செய்திப்பிரிவு

பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சென்னையில் இன்று பிரச்சாரம் செய்கிறார்.

பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, விருதுநகர் தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த இரண்டு வாரங்களாக அவர் விருதுநகர் தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்.

இந்நிலையில் வைகோ இன்று (வெள்ளிக் கிழமை) சென்னையில் பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, பிரச்சாரம் செய்யவுள்ளார். காலை 10 மணிக்கு வட சென்னை தொகுதி தேமுதிக வேட்பாளர் சவுந்தரபாண்டியனை ஆதரித்து முத்தமிழ் நகரிலும், 11 மணிக்கு மத்திய சென்னை தொகுதி தேமுதிக வேட்பாளர் ரவீந்திரனை ஆதரித்து , சூளைமேடு காந்தி சிலை அருகிலும் பிரச்சாரம் செய்கிறார்.

தென் சென்னை பாஜக வேட்பாளர் இல.கணேசனை ஆதரித்து, மாலை 5 மணிக்கு தேனாம்பேட்டை திருவள்ளுவர் சாலை, மாலை 6 மணிக்கு சைதாப்பேட்டை ஐந்து விளக்கு, மாலை 7 மணிக்கு தியாகராயர் நகர் பிருந்தாவன் சாலை மற்றும் இரவு 8 மணிக்கு விருகம்பாக்கம் தசரதபுரம் ஆகிய இடங்களில் வைகோ பிரச்சாரம் செய்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

தமிழகம்

33 mins ago

சினிமா

53 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

29 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

மேலும்