பெரியபாளையம் அருகே பயங்கரம்; பள்ளி ஆசிரியைக்கு கத்திக்குத்து: மர்ம நபர்கள் இருவருக்கு வலை

By செய்திப்பிரிவு

பெரியபாளையம் அருகே தனியார் பள்ளி ஆசிரியையை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். இந்த கத்திக்குத்து சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே உள்ள அழிஞ்சிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணன் மகள் பூமணி(25). இவர் பாக்கம் பகு தியில் உள்ள தனியார் தொண்டு நிறுவன பள்ளி ஒன்றில் ஆசிரி யையாக பணிபுரிந்து வருகிறார்.

நேற்று இரவு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பூமணி, அதிகாலை 3 மணிக்கு கழிப்பறைக்குச் செல்வதற்காக வீட்டுக்கு வெளியே வந்துள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த இரு மர்ம நபர்கள் அவரை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது.

கத்திக் குத்துக்கு ஆளாகி படுகாயமடைந்த பூமணியின் அலறல் சத்தம் கேட்டு குடும்பத்தினரும் அக்கம்பக்கத்தினரும் ஓடி வந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை பெரியபாளையம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற பிறகு, திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

புகாரின்பேரில் பெரியபாளையம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

பூமணியின் தங்கையை கடந்த வாரம், அழிஞ்சிவாக்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, பூமணி அளித்த புகாரின் அடிப் படையில் பெரியபாளையம் போலீஸார் இரு இளைஞர்களை கைது செய்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த இளைஞர்கள் தரப்பினர் கைது நடவடிக் கைக்கு பழிவாங்கும் வகையில் பூமணியை கத்தியால் குத்தியிருக்கலாம் என கூறப்படுகிறது. அதுபற்றியும் போலீஸார் விசா ரித்து வருகின்றனர்.

கத்தியால் குத்தி கொல்ல முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

16 mins ago

இந்தியா

28 mins ago

கல்வி

49 mins ago

தமிழகம்

53 mins ago

சினிமா

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

இந்தியா

57 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்