கிரீமிலேயர் பாகுபாட்டை அகற்ற முன்வர வேண்டும்- சோனியா காந்திக்கு கருணாநிதி வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

“கிரீமிலேயர்” எனும் பாகுபாட்டை அகற்றிட, மத்திய அரசு முன்வர வேண்டும் என்று சோனியாகாந்தியை திமுக தலைவர் கருணாநிதி கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வியாழக் கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாநிலங்கள் அவையில் காங் கிரஸ் பொதுச் செயலாளர் ஜனார்த்தன் துவிவேதி, “சாதி அடிப்படையிலான இடஒதுக் கீடு முடிவுக்கு வர வேண்டும். பொருளாதார ரீதியில் பின்தங்கிய அனைத்து சமூகத்தினருக்கும் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண் டும்” என்று பேசியுள்ளார். அவருடைய இந்தக் கருத்தை பல் வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப் பினர்களும் கடுமை யாக எதிர்த்திருக்கிறார்கள்.இதனை யடுத்து, மத்திய அரசின் நிலைப் பாடு குறித்து நாடாளுமன்ற விவகாரத்

துறை இணை அமைச்சர் ராஜீவ்சுக்லா விளக்க மளித்துப் பேசுகையில், “பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு அளிப்பதற் கான எந்த உத்தேசத் திட்டத்தையும் அரசு பரிசீலிக்கவில்லை.

அரசியலைமைப்புச் சட்டத்தின் படி இப்போதுள்ளது போலவே இடஒதுக்கீடு தொடர்ந்து நீடிக்கும். துவிவேதி தெரிவித்தது அவரது தனிப்பட்ட கருத்துகள்” என்று அறிவித்திருக்கிறார். இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவி சோனியாகாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சாதி ரீதியிலான இடஒதுக்கீடு முறை நீடிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

சோனியாகாந்தி இடஒதுக்கீடு குறித்து செய்திருக்கும் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது. மத்தியப் பணியாளர் தேர் வாணை யம் (யு.பி.எஸ்.சி.) நடத்தும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்ற தேர்வுகளில் வருமான வரம்பை அடிப்ப டையாகக் கொண்ட “கிரிமீலேயர்” என்ற பாகுபாடு பின்பற்றப்பட்டு வருவதை திமுக தொடர்ந்து எதிர்த்து வருகிறது.

மத்திய அமைச்சர் ராஜீவ் சுக்லா அறிவித்துள்ளபடி, “பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு அளிப்பதற்கான எந்த உத்தேசத் திட்டத்தையும் அரசு பரிசீலிக்க வில்லை” என்பது மத்திய அரசின் உறுதியான நிலைப்பாடு எனில், “கிரீமிலேயர்” எனும் பாகுபாட்டை அகற்றிட மத்திய அரசு முன்வர வேண்டும் என்ற நமது நீண்டநாள் கோரிக்கையை இந்தத் தருணத்தில் நினைவு படுத்த விரும்புகிறேன் என்று அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

இந்தியா

26 mins ago

இந்தியா

23 mins ago

இந்தியா

35 mins ago

இந்தியா

40 mins ago

இந்தியா

4 hours ago

இந்தியா

58 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்