நெடுஞ்சாலைகளில் நிறுத்தப்படும் வாகனங்களால் அதிகரிக்கும் சாலை விபத்துகள்: தமிழகத்தில்தான் அதிக சம்பவங்கள் என புள்ளிவிவரம்

By கி.ஜெயப்பிரகாஷ்

நெடுஞ்சாலைகளில் நிறுத்தப்படும் வாகனங்களால், சாலை விபத்துகளில் இறப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே, பழுதான வாகனங் களை உடனே அகற்றவும், நெடுஞ்சாலை களில் வாகனங்களை நிறுத்தி ஓய்வெடுக் கும் இடங்களின் எண்ணிக்கையை அதி கரிக்கவும் கோரிக்கை எழுந்துள்ளது.

இந்தியாவில் கடந்த ஆண்டில் மட்டும் 1.30 லட்சம் பேர் சாலை விபத்துகளில் இறந்துள்ளதாக ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகமாக சாலை விபத்துகள் நடக்கின் றன. இதற்கு அடுத்த இடத்தில் உத்தர பிரதேசமும் மற்றும் ஆந்திரபிரதேசமும் இருக்கிறது. 2013-ல் தமிழகத்தில் மொத்தம் 67,657 சாலை விபத்துக்கள் நடந்துள்ளன. அதில், 16,175 பேர் இறந் துள்ளனர். சாலை விபத்துகளில் பெரும் பாலானவை நெடுஞ்சாலைகளில்தான் ஏற்படுகின்றன. அதிலும் வாகனங்களின் பின் பகுதிகளில் மோதும் சாலை விபத்துகள் தான் அதிகமாக நடக்கின்றன. பழுதுபட்டோ அல்லது ஓய்வுக்காகவோ நிறுத்தி வைக்கப்படும் வாகனங்கள் மீது மற்ற வாகனங்கள் மோதும் விபத் துகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

உதாரணமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள கோபசந்திரம் என்னுமிடத்தில் ஞாயிற்றுக்கிழமை யன்று அதிகாலை 2 மணியளவில் பழு தாகி சாலையோரம் நின்றுகொண்டிருந்த கிரானைட் லாரி மீது அடுத்தடுத்து வந்த 2 கார்கள் பலமாக மோதின. இதில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பழுதான லாரியை வேறு இடத்துக்கு உடனடியாக அப்புறப்படுத்தாததும், பின்னால் வரும் வாகன ஓட்டிகள் லாரியை பார்க்கும் வண்ணம் ஒளிர்பட்டை இல்லாததுமே இந்த விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இதுபோன்ற விபத்துகள் குறித்து சென்னை ஐஐடியில் போக்குவரத்து துறை பிரிவில் பணியாற்றி வரும் டாக்டர் ரா.கீதகிருஷ்ணனிடம் கேட்டபோது, ‘‘நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் பழு தானால் உடனடியாக அவற்றை வேறு இடத்துக்கு அப்புறப்படுத்த வேண்டும். அதை அப்புறப்படுத்தும்வரை மற்ற வாகன ஓட்டிகளுக்கு பழுதான வாகனம் நன்றாக தெரியுமளவுக்கு ஒளிர்பட்டைகளை நிறுவ வேண்டும்.

நெடுஞ்சாலைகளில் 108 ஆம்புலன்ஸ் வைத்திருப்பதுபோல், பழுதான வாகனங்களை அப்புறப்படுத்தும் வாகனங்களையும் அதிகப்படுத்த வேண்டும்.. மேலும் போதிய ஓய்வில்லா மல் வாகனங்களை ஓட்டும் ஓட்டுநர்கள் மீது நெடுஞ்சாலைத்துறை போலீஸ் அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நெடுஞ்சாலை களில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் நெடுஞ்சாலை களில் தற்போது இருக்கும் ஓய்வு எடுக்கும் இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். ஒவ்வொரு இடத் திலும் ஆட்களை நியமித்து வாகனங் களை ஒழுங்குபடுத்த வேண்டும்” என்றார்.

இது தொடர்பாக போக்குவரத்து துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘தமிழகம் முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகள் 260 பேட்ரோல் வாகனங்கள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன. மேலும், எல்லா வாகனங்களும் இருபுறமும் பக்க வாட்டில் டேப் சுற்ற வேண்டுமென வாகன ஓட்டிகளுக்கு உத்தரவிட்டுளோம். அப் போது, தான் இரவில் வாகனம் செல்லும் போது முழுமையாக தெரியும். சாலை விதிமுறைகளை மீறும் வாகனங்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளோம்’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்