உயர் நீதிமன்றத்தில் கணவருடன் நேரில் ஆஜர்: சசிகலா புஷ்பா முன்ஜாமீன் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு - உயர் நீதிமன்றம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு

By கி.மகாராஜன்

பணிப்பெண்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் சசிகலா புஷ்பா முன்ஜாமீன் மனு மீதான உயர் நீதிமன்ற தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக் கில் சசிகலா புஷ்பா கணவருடன் நேரில் ஆஜரானார். இதையடுத்து நீதிமன்ற வளாகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.

மாநிலங்களவை எம்.பி சசிகலா புஷ்பா, அவரது கணவர் லிங்கேஸ் வர திலகம், மகன் பிரதீப்ராஜா, தாயார் கௌரி ஆகியோர் மீது இரு பணிப்பெண்கள் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி, நாக மலை புதுக்கோட்டை போலீஸார் பாலியல் வழக்குப் பதிவு செய் துள்ளனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி 4 பேரும் உயர் நீதிமன்ற கிளையில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுக்கள் உயர் நீதிமன்றத் தில் விசாரணைக்கு வந்தபோது ‘சசிகலா புஷ்பா சிங்கப்பூரில் உள் ளார். ஆனால் அவர் மதுரைக்கு வந்து வழக்கறிஞர் முன்னிலையில் வக்காலத்து நமுனாவில் கையெழுத்திட்டதாக கூறியுள்ளார். இதில் சந்தேகம் உள்ளது’ என கூடுதல் அட்வகேட் ஜெனரல் தெரிவித்தார். இதையடுத்து சசிகலா புஷ்பா, அவரது கணவர், மகன் ஆகியோர் நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து சசிகலா புஷ்பா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வு சசிகலா புஷ்பா, அவரது குடும்பத்தினரை கைது செய்ய தடை விதித்தும், உச்ச நீதிமன்றம் சசிகலா புஷ்பா உள்ளிட்ட 3 பேர் நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டது.

இந்நிலையில் சசிகலா புஷ்பா உள்ளிட்டோரின் முன்ஜாமீன் மனுக் கள் நீதிபதி வி.எம்.வேலுமணி முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சசிகலா புஷ்பா, அவ ரது கணவர் லிங்கேஸ்வர திலகம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.

வக்காலத்து நமுனாவில் மது ரைக்கு நேரில் வந்து கையெழுத் திட்டதில் சந்தேகம் இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு உங்கள் பதில் என்ன? என சசிகலா புஷ்பாவிடம் நீதிபதி கேள்வி கேட்டார். அதற்கு நான் மதுரைக்கு வந்து கையெழுத்திடவில்லை. டெல்லியில் வைத்து வக்காலத்து நமுனாவில் கையெழுத்திட்டு கண வரிடம் கொடுத்தேன். அவர் மது ரைக்கு நேரில் வந்து வழக்கறி ஞரிடம் வழங்கினார் என்றார்.

இதையடுத்து நடைபெற்ற விவாதம்:

சசிகலா தரப்பில் மூத்த வழக்கறிஞர் வீர.கதிரவன்:

இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் போலீஸார் மாற்றம் செய்துள்ளனர். போக்ஸோ (குழந் தைகளை பாலியல் கொடுமைகளில் இருந்து பாதுகாக்கும் சட்டம்) சட்டப்பிரிவையும் சேர்த்துள்ள னர். இந்த மாற்றம் குறித்து மனு தாரர்களுக்கு தெரிவிக்கவில்லை. உச்ச நீதிமன்றம் சென்றபோதும் முதல் தகவல் அறிக்கையில் செய் யப்பட்ட மாற்றத்தை அரசு தரப்பில் தெரிவிக்கவில்லை. சம்பவம் 2011-ல் நடைபெற்றுள்ளது. 5 ஆண்டு கள் தாமதமாக வழக்கு பதிவு செய் துள்ளனர்.

2013-ம் ஆண்டில்தான் போக்ஸோ சட்டம் நிறைவேற்றப்பட் டது. அதற்கு முன்னர் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக போக்ஸோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய முடியாது. 2013-ல் பணியிடங்களில் பெண்களுக்குப் பாலியல் தொந்த ரவு கொடுப்பதை தடுக்கும் சட் டம் கொண்டுவரப்பட்டுள்ளது. உண்மையில் சம்பவம் நடைபெற் றிருந்தால் இந்தச் சட்டத்தில்தான் வழக்குப் பதிவு செய்திருக்க வேண் டும். போக்ஸோ சட்டம் தவிர்த்து வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள பிற பிரிவுகள் ஜாமீனில் விடக்கூடியது ஆகும். மனுதாரர் ஜாமீன் பெறக் கூடாது என்பதற்காகவே போக்ஸோ சட்டத்தைச் சேர்த்துள்ளனர். மனு தாரர்கள் மீது பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.புகழேந்தி:

மனுதாரர்களின் முன்ஜாமீன் மனுவே விசாரணைக்கு உகந்தது அல்ல. வக்காலத்து நமுனாவில் கையெழுத்திட்டதில் மோசடி செய்துள்ளனர். இதனால் மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது. புகார்தாரர்களை மனுதாரர்கள் வீட்டில் அடைத்து வைத்து தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர்.

போக்ஸோ சட்டம் வந்த பிறகும் பாலியல் பலாத்காரம் தொடர்ந்து நடைபெற்றுள்ளது. இதனால் போக்ஸோ சட்டம் சேர்க்கப்பட்டது. இதனால் மனுதாரர்களுக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என்றார்.

இரண்டு மணி நேர விசா ரணைக்கு பிறகு சசிகலா புஷ்பா குடும்பத்தினர் முன்ஜாமீன் மனுக் கள் மீது தீர்ப்பு வழங்குவதை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்தி வைத்தார்.

காமராஜர் சிலைக்கு மாலை

முன்னதாக நேற்று காலை மதுரை வந்த சசிகலா புஷ்பா, நீதிமன்றத்துக்கு செல்வதற்கு முன்பாக சொந்த ஊரில் இருந்து வந்த ஆதரவாளர்களுடன் காரில் ஊர்வலமாகச் சென்று விளக்குத் தூண் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு அளித்தனர்.

கராத்தே செல்வின் ஆதரவாளர் பாதுகாப்பு

சசிகலா புஷ்பாவும், அவரது கணவரும் 11.30 மணியளவில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உயர் நீதிமன்றம் வந்தனர். அவர்களுக்கு பாதுகாப்பாக சென்னை ஹரிநாடார் தலைமையில் கராத்தே செல்வின் நாடார் ஆதரவாளர்கள் காமராஜர், சசிகலா புஷ்பாவின் படங்கள் அச்சிடப்பட்ட போஸ்டர்கள் ஒட்டிய 30 கார்களில் பின்தொடர்ந்து வந்தனர். இதற்காக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து அவரது ஆதரவாளர்கள் ஏராளமான அளவில் நீதிமன்ற வளாகத்துக்கு வந்திருந்தனர்.

சுமார் ஒரு மணி நேரம் நீதிமன்றத்துக்கு வெளியே காத்திருந்த சசிகலா புஷ்பா, நீதிபதி முன்பு 12.30 மணியளவில் ஆஜரானார். மதியம் 1.20 வரை விசாரணை நடைபெற்றது. பின்னர் விசாரணை மாலை 4 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் மாலை 4 மணிக்கு சசிகலா புஷ்பா உயர் நீதிமன்றம் வந்தார். மாலை 5.45 வரை விசாரணை நடைபெற்றது. பின்னர் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

சசிகலா புஷ்பாவின் வருகையால் உயர் நீதிமன்றம் வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அவர் தங்கியிருந்த ஓட்டலில் இருந்து உயர் நீதிமன்ற கிளை வரை சாலையின் இரு பக்கங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

10 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

19 mins ago

இந்தியா

18 mins ago

இந்தியா

25 mins ago

இந்தியா

30 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

37 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்