தேசிய சாலை பாதுகாப்பு வாரம் குறித்து மத்திய அரசு புதிய உத்தரவு

By செய்திப்பிரிவு

மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஆண்டுதோறும் சாலை விபத்துகளால் நாடுமுழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இறக்கின்றனர். எனவே, பாதுகாப்பான பயணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம். அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் தேசிய சாலை பாதுகாப்பு வாரமாக கடைப்பிடிக்கப்பட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் வரும் 10-ம் தேதி முதல் 16-ம் தேதி வரையில் 27-வது சாலை பாதுகாப்பு வாரமாக கடைப்பிடிக்கப்படவுள்ளது. ஒவ்வொரு மாநிலங்களில் இருக்கும் போக்குவரத்து துறை, போக்குவரத்து போலீஸ், கல்வித்துறை, மாவட்ட அமைப்புகள், தன்னார்வதொண்டு நிறுவனங்கள் உட்பட பல்வேறு துறையினர் மூலம் சாலை விழிப்புணர்வு தொடர்பாக கருத் தரங்குகள், கண்காட்சிகள், வினாடி வினா, கட்டுரை, பேச்சு, ஓவியப் போட்டிகள் நடத்தலாம். ஓட்டுநர்களுக்கு மருத்துவ முகாம்கள், போக்கு வரத்து விதிமுறைகள், சாலை விபத்துகளைத் தடுப்பது தொடர்பாக விழிப் புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தலாம். மேற்கொண்ட பணிகள் தொடர்பாக முழு அறிக்கையை வரும் 31-ம் தேதிக்குள் மத்திய அமைச்சகத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

39 secs ago

விளையாட்டு

54 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தொழில்நுட்பம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்