தமிழக காங்கிரஸ் 2-வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் காங்கிரஸ் சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இரண்டாவது பட்டியலை, டெல்லி மேலிடம் இன்று வெளியிட்டது.

அதில், மறைந்த காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தியின் மகன் உள்பட 3 பேர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, திருவள்ளூர் (தனி) தொகுதியில் விக்டரி எம்.ஜெயக்குமார், பொள்ளாச்சியில் கே.செல்வராஜ் மற்றும் தருமபுரியில் வாழப்பாடி ராம சுகந்தன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

முன்னதாக, தமிழகத்தில் போட்டியிடும் 30 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

தென்சென்னை, வடசென்னை, கன்னியாகுமரி, கரூர், விழுப்புரம் (தனி) கிருஷ்ணகிரி ஆகிய 6 தொகுதிகளுக்கு ஓரிரு நாள்களில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது. புதுச்சேரியில் மத்திய இணையமைச்சர் நாரயணசாமி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளார்.







VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

24 mins ago

ஜோதிடம்

28 mins ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

வாழ்வியல்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்