சங்க கால கொற்கைப் பாண்டியன் ‘மாறன்’ பெயர் கொண்ட வித்தியாசமான நாணயம்: தென்னிந்திய நாணயவியல் ஆய்வுக் கழகத் தலைவர் இரா.கிருஷ்ணமூர்த்தி புதிய தகவல்

By செய்திப்பிரிவு

நாணயத்தில் சங்க கால கொற்கைப் பாண்டியன் ‘மாறன்’ பெயர் பொறிக்கப்பட்டிருப்பதாக தென்னிந்திய நாணயவியல் ஆய்வுக் கழகத் தலைவர் இரா.கிருஷ்ணமூர்த்தி தெரிவித் துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

பல ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு கிடைத்த நாணயம் ஒன்று உருவங்கள் ஏதும் தெரி யாத அளவுக்கு கறுப்பு நிறத்தில் கடினமான மாசு படிந்திருந்தது. பல நாட்கள் மெதுவாக சுத்தப் படுத் தினேன். அந்த நாணயத்தின் முன் புற மத்தியில் சிதைந்த நிலையில் ஒரு உருவம் உள்ளது. சிதைந்த உருவத்தின் மேல், தமிழ் - பிராமி எழுத்து முறையில், இரண்டு எழுத்துக்கள் தென்படுகின்றன.

அந்த உருவத்தின் கீழ்பகுதியில் நீள் சதுர வடிவில் ஒரு தொட்டி இருக்கிறது. தொட்டியின் மேல் விளிம்பைத் தொட்டு இரண்டு ஆமைகள் ஒன்றை ஒன்று எதிர் நோக்கி இருப்பது போல் அச்சா கியுள்ளது.

அதேபோல், தொட்டியின் கீழ் விளிம்பைத் தொட்டு இரண்டு ஆமைகள் உள்ளன. முழு உருவம் அச்சாகவில்லை. இந்த நான்கு ஆமைகளுக்கு மத்தியில் இடப் பக்கம் நோக்கி, ஒரு சிறிய ஆமை உள்ளது.

தொட்டியின் வெளியே வலப் பக்கம் நாணயத்தின் விளிம்பை ஒட்டி, வேலியிட்ட மரச்சின்னம் உள்ளது. நாணயத்தின் இடது பக்கம் மேல் மூலைப்பகுதியில் மவுரிய பிராமி எழுத்து முறையில், ‘மா’ என்று உள்ளது.

மத்தியிலுள்ள சின்னத்திற்கு மேலாக, ‘ற’ என்ற எழுத்து வலப்பக்கத்திலிருந்து இடப் பக்கமாக நாணயத்தின் மேல் விளிம்பை ஒட்டி சாய்ந்த நிலையில் இருக்கிறது. இந்த எழுத்து நின்ற நிலையில் தான் இருந்தி ருக்க வேண்டும். இடப்பற்றாக் குறையால் சாய்ந்த நிலையால் இவ்வாறு அச்சிடப்பட்டுள்ளது. இந்த எழுத்து, தமிழ் - பிராமி வகையை சேர்ந்தது.

கடைசியாக, வலது பக்கம் மூலையில் மேல் விளிம்பை ஒட்டி, ‘ன்’ என்ற எழுத்து உள்ளது. இதுவும் தமிழ் பிராமி வகையைச் சேர்ந்தது.

இந்த நாணயத்தில் இருப்பது போல் தொட்டியும், அதில் நான்கு பெரிய ஆமைகள், ஒன்றை ஒன்று எதிர்நோக்கி இருக்கும் நாண யத்தை, மதுரையை ஆண்ட சங்க கால பாண்டியர்கள் வெளியிட் டுள்ளனர்.

அந்தத் தொட்டியின் மேல் பகுதியில், யானை ஒன்று வலப் பக்கம் நோக்கி நிற்பது போல் அச்சாகியுள்ளது. அந்த நாண யத்தின் பின்புறத்தில் கோட்டு வடிவ மீன் சின்னம் அழகாக உள்ளது. இந்த நாணயம் குறித்து, நான் வெளியிட்டுள்ள ‘பாண்டியன் பெருவழுதி நாணயங்கள்’ என்ற நூலில் பார்க்கலாம்.

இந்த நாணயம் போல் மாறன் பெயர் பொறிப்பு நாணயத்தில் சிதைந்த நிலையில் உள்ள உருவம் யானையின் உருவமாக இருக் கலாம்.

மாறன் பெயர் கொண்ட நாணயத்தின் பின்புறம்:

இரண்டு பெரிய மீன்கள், ஒன்றை ஒன்று எதிர் நோக்கி நின்ற நிலையில் உள்ளன.

நான் ஏற்கெனவே செழியன் நாணயம் பற்றி எழுதியுள்ள கட்டு ரையில், இரட்டை மீன்கள் சங்க கால கொற்கை பாண்டியர்களின் சின்னம் என்று குறிப்பிட்டிருக் கிறேன்.

மேலும், அக்கட்டுரையில் பேரரசன் அசோகன் தன் கிர்னார் கல் வெட்டில் சோழ, பாண்டிய, சத்திய புத்திர, சேர, தாமிரவருணி என்ற நாடுகள், தன் நாட்டின், தென் எல்லைக்கு அப்பால் இருந்ததாகக் கூறிஉள்ளதைப் பற்றி குறிப்பிட் டிருக்கிறேன்.

இக்கல்வெட்டின் காலம், கி.மு., மூன்றாம் நூற்றாண்டாக இருக் கலாம். கொற்கையை தலை நகராகக் கொண்ட பாண்டியர் களின் நாடு தாமிரவருணி நாடாக இருக்கலாம் என்றும் கூறியுள்ளேன். இந்த நாணயத்தின் காலம் கி.மு., மூன்றாம் நுாற்றாண்டாக இருக் கலாம்.

இதுபோன்ற சங்க கால நாணயச் சான்றுகள், வருங் காலத்தில் கிடைத்தால், தமிழகத் தின் தொன்மை வரலாறு பற்றி, மேலும் அறிவதுடன், அக்காலத்தை நிர்ணயம் செய்யவும் உதவிடும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

27 mins ago

விளையாட்டு

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

சினிமா

2 hours ago

க்ரைம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

3 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

மேலும்