பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நேரத்தை மாற்றக் கூடாது: ராமதாஸ்

By செய்திப்பிரிவு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நேரங்களை மாற்றக்கூடாது, வழக்கம் போல் காலை 10 மணிக்கு தொடங்கி, பிற்பகல் 12.45 மணி வரை நடத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் மார்ச் 26 ஆம் தேதி முதல் ஏப்ரல் 9 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. வழக்கமாக காலை 10 மணிக்கு தொடங்கி இரண்டரை மணி நேரம் நடைபெறும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் காலை 9.15 மணிக்கே தொடங்கும் என அரசுத் தேர்வுத் துறை அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பு கிராமப்புற மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் காலம்காலமாகவே காலை 10 மணிக்கு தொடங்கி தான் நடைபெற்று வருகின்றன.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்கும் தேர்வு மையங்கள் கிராமப்புறங்களில் இருந்து வெகுதொலைவில் இருப்பதால், கிராமப்புற மாணவர்கள் குறைந்தது அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை பயணம் செய்து தான் தேர்வு எழுதும் இடத்தை சென்றடைய முடியும்.

பேருந்து வசதி சரியாக இல்லாத பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் தேர்வு மையத்தைச் சென்றடைவதற்கான நேரம் இன்னும் அதிகமாகும். இத்தகைய சூழலில் பத்தாம் வகுப்பு தேர்வுகளை முன்கூட்டியே தொடங்குவது கிராமப்புற மாணவர்களை கடுமையாக பாதிக்கும்.

எனவே, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை கடந்த காலங்களில் நடத்தப்பட்டது போலவே, காலை 10 மணிக்கு தொடங்கி, பிற்பகல் 12.45 மணி வரை நடத்த வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

53 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

சுற்றுலா

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

சுற்றுலா

3 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

4 hours ago

உலகம்

5 hours ago

மேலும்