ரயில் நிலையங்களில் மார்ச் இறுதிக்குள் 441 ஸ்வைப் கருவிகள்: தெற்கு ரயில்வே திட்டம்

By செய்திப்பிரிவு

பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் முன்பதிவு மையங்கள், டிக்கெட் கவுன்ட்டர்களில் மார்ச் மாத இறுதிக்குள் 441 ஸ்வைப் கருவிகளைப் பொருத்த தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.

நாடு முழுவதும் பணமில்லாத பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக் கைகள் எடுக்கப்பட்டு வருகின் றன. ரயில்வே துறையில் இது தொடர்பாக என்ன முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று கேட்டதற்கு, ரயில்வே அதிகாரிகள் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

டிக்கெட் முன்பதிவு செய்பவர் களில் 55 சதவீதம் பேர் ஆன் லைனில் முன்பதிவு செய்கின்றனர். முன்பதிவு இல்லாத பொது டிக்கெட், சீசன் டிக்கெட் பெறுவ தற்கான கட்டணங்கள் முழுக்க முழுக்க ரொக்கமாகவே கவுன்ட் டர்களில் பெறப்படுகின்றன. இதனால், சில்லறைப் பிரச்சினை ஏற்படுகிறது. மக்கள் நீண்டநேரம் வரிசையில் காத்திருக்கவும் நேரிடு கிறது. இந்த அவதிகளைத் தவிர்க்கவும், இதிலும் பண மில்லாத பரிவர்த்தனையை ஊக்குவிக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படு கின்றன.

சென்னை, மும்பை, டெல்லி போன்ற மாநகரங்களில் முதல்கட்ட மாக 1,000 ஸ்வைப் கருவிகள் நிறுவப்பட்டு வருகின்றன. தெற்கு ரயில்வேயில் இதுவரை 140-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் ஸ்வைப் கருவிகள் பொருத்தப் பட்டுள்ளன. டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலம் 3 மாதம், 6 மாதம், ஓராண்டுக்கு மின்சார ரயில் சீசன் டிக்கெட் பெறு வோருக்கு 0.5 சதவீதம் சலுகை அளிக்கப்படுகிறது. மார்ச் இறுதிக்குள் 441 ஸ்வைப் கருவிகள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான பணி வேகமாக நடந்துவருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

57 mins ago

சினிமா

5 mins ago

விளையாட்டு

19 mins ago

சினிமா

28 mins ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

உலகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்