விஜயகாந்தை டெபாசிட் இழக்க செய்த எம்எல்ஏ-வுக்கு மா.செ. பதவி வழங்கியது அதிமுக

By எஸ்.நீலவண்ணன்

விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளராக குமரகுரு எம் எல் ஏ.. பதவி கிடைத்தது எப்படி..?பின்னணி தகவல்கள்

விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளராக இருந்த கதிர் தண்டபாணியிடம் இருந்த பதவி பறிக்கப்பட்டு உளுந்தூர்பேட்டை எம் எல் ஏ குமரகுருவிடம் அப்பதவி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் அதிமுகவில் நிர்வாகிகள் மாற்றப்பட்ட பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.இந்தமாற்றத்திற்கான பின்னணி என்ன என அதிமுக வட்டாரங்களில் விசாரித்தபோது கிடைத்த விவரங்கள் பின்வருமாறு;,

கடந்த அதிமுக ஆட்சியில் தொழில்துறை அமைச்சராக இருந்த மோகனிடமிருந்த தெற்கு மாவட்ட செயலாளர் பதவி கடந்த ஆண்டு பறிக்கப்பட்டு ரிஷிவந்தியம் ஒன்றிய செயலாளராக இருந்த கதிர் தண்டபாணியிடம் வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நடந்த சட்டமன்ற தேர்தலில் மாவட்டத்திற்குட்பட்ட 5 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களில் கள்ளகுறிச்சியில் பிரபு, உளுந்தூர்பேட்டையில் குமரகுரு ஆகியோர் மட்டுமே வெற்றி பெற்றனர்.

மற்ற தொகுதிகளில் திருக்கோவிலூரில் திமுக வேட்பாளர் பொன்முடி, சங்கராபுரத்தில் உதயசூரியன், ரிஷிவந்தியத்தில் கார்த்திகேயன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

இதில் போட்டியிட்ட மாவட்ட செயலாளராக கதிர் தண்டபாணி திமுக வேட்பாளர் கார்த்திகேயனிடம் 14,528 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பை இழந்தார்.

சங்கராபுரத்தில் மோகன் திமுக வேட்பாளர் உதயசூரியனிடம் 14,528 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

மேலும் திருக்கோவிலூரில் போட்டியிட்ட முன்னாள் திமுக எம் எல் ஏ பொன்முடி மாவட்டத்திலேயே அதிக வாக்குகளான 41,057 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் கோதண்டராமனை தோற்கடித்தார்.

இவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் பொன்முடி வெற்றி பெற்றதற்கான காரணத்தை அதிமுக தலைமை தனி குழு அமைத்து விசாரணை மேற்கொண்டது.

அதில் அதிமுகவினர் தேர்தல் வேலைகளை முழுமையான ஈடுபாட்டுடன் மேற்கொள்ளவில்லை.நிர்வாகிகளுக்கும், மாவட்ட செயலாளருக்குமான கருத்துவேறுபாடுகளே காரணம், மோகனும் , கதிர் தண்டபாணியும் தனித்தனி கோஷ்டிகளாக செயல்பட்டனர் என்பதும் விசாரணையில் தெரியவந்ததாக தெரியவந்தது.

இதையடுத்து அமைப்பு செயலாளாராக இருந்த மோகனின் பதவியும் பறிக்கப்பட்டது.

இதையடுத்து யாருக்கு மாவட்ட செயலாளர் பதவியை அளிக்கலாம் என்ற கேள்வி எழுந்தபோது தேமுதிக தலைவர் விஜயகாந்தை டெபாசிட் இழக்க செய்யும் வகையில் குமரகுரு வெற்றி பெற்றார். மேலும் 2006ம் ஆண்டில் மாவட்ட செயலாளராக பதவி வகித்த அனுபவம் உள்ளதால் குமரகுரு தலைமையில் வரும் உள்ளாட்சி தேர்தலை சந்தித்தாலே வெற்றி வாய்ப்பை அதிகரிக்கமுடியும் என்ற தலைமையில் கணிப்பே அவருக்கு இப்பதவியை வழங்கியது.

மேலும் திமுக நடத்திய செம்மொழி மாநாட்டிற்கு தனது கல்லூரி பேருந்தை அனுப்பியது. மாநாட்டை வாழ்த்தி அவரது ஆதரவாளர்கள் பேனர் வைத்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளால் அப்போது அவரது பதவி பறிக்கப்பட்டது என்கிறார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 mins ago

தொழில்நுட்பம்

7 mins ago

தமிழகம்

9 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

56 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

52 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

மேலும்