சென்னை போலீஸார் உஷார்: நெடுவாசல் போராட்டத்தை கண்காணிக்கும் உளவுத்துறை

By செய்திப்பிரிவு

ஜல்லிக்கட்டுபோல நெடுவாசல் போராட்டமும் பரவிவிடக் கூடாது என்பதற்காக உளவுப் பிரிவு போலீஸார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். சென்னை போலீஸாரும் உஷார் நிலையில் உள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் என்னும் இயற்கை எரிவாயு திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஹைட்ரோ கார்பன் திட்டத் துக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பி யுள்ளது. முதல்கட்டமாக அப் பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக இளைஞர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இதனால், ஜல்லிக்கட்டு போல இந்தப் போராட்டம் படிப்படியாக தமிழகம் முழு வதும் பரவ வாய்ப்பு உள்ளதாக உளவுத்துறை போலீஸார் எச்சரித்துள்ளனர்.

டிஜிபி ஆலோசனை

இதுகுறித்து, டிஜிபி டி.கே. ராஜேந்திரனுக்கு தகவல் கொடுக் கப்பட்டுள்ளது. இதையடுத்து போராட்டம் குறித்து போலீஸ் அதிகாரிகளுடன் டிஜிபி ஆலோசனை நடத்தியுள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் நடந்த போராட்டம்போல நடந்து விடக் கூடாது என்பதில் போலீஸார் உறுதியாக உள்ளனர்.

அதனால், நெடுவாசல் போராட்டத்தை உளவுப் பிரிவு போலீஸார் தீவிரமாக கண் காணித்து வருகின்றனர். அதே போல நுண்ணறிவு பிரிவு போலீ ஸார் கொடுத்த தக வலைத் தொடந்து சென்னை போலீஸா ரும் கண்காணிப்புப் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

33 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

49 mins ago

சினிமா

1 hour ago

க்ரைம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தொழில்நுட்பம்

54 mins ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

மேலும்