முதல்வர், 6 அமைச்சர் பதவிகளை கேட்கிறார் ஓபிஎஸ்: வெற்றிவேல் எம்.எல்.ஏ குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

அதிமுகவின் இரு அணிகளும் இணைய முதல்வர், 6 அமைச்சர் பதவிகள் வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் நிபந்தனை விதிப்பதாக வெற்றிவேல் எம்.எல்.ஏ குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக இன்று சென்னையில் டிடிவி தினகரன் இல்லத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு வெற்றிவேல் செய்தியாளர்களிடம் கூறியதாவது: .

''எங்களிடம் 122 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். ஓபிஎஸ்ஸிடம் 12 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே உள்ளனர். எனவே, அவர்கள் தான் எங்களிடம் பேச வர வேண்டும். ஆனால், சில அமைச்சர்கள் அவர்களது சுயநலனுக்காக கூட்டம் நடத்துவது ஏற்க முடியாது. என்னைப் போன்றவர்களுக்கு இழப்பதற்கு எதுவும் இல்லை. எதற்காகவும், யாரிடமும் மண்டியிட மாட்டோம்.

ஓபிஎஸ் அணியுடன் பேச்சு நடத்த அமைச்சர்கள் குழு எதுவும் அமைக்கப்படவில்லை. அதுபற்றி வெளியான தகவல் தவறானது. மீண்டும் அதிமுகவில் இணைய முதல்வர் பதவியும், நிதி, உள்துறை, பொதுப்பணி, மின்சாரம், நெடுஞ்சாலை போன்ற 6 முக்கிய துறைகளின் அமைச்சர் பதவிகளும் வேண்டும் என ஓபிஎஸ் நிபந்தனை விதித்துள்ளார்'' என்று வெற்றிவேல் கூறினார்.





VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

தமிழகம்

6 hours ago

க்ரைம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

கல்வி

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

கல்வி

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்