கெயிலுக்கு அனுமதி: உச்ச நீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு

By செய்திப்பிரிவு

ஏழு மாவட்டங்கள் வழியாக குழாய் மூலம் எரிவாயு கொண்டு செல்லும் கெயில் நிறுவனத்தின் திட்டத்தை செயல்படுத்த உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.

கொச்சியிலிருந்து குட்டநாடு, மங்களூர் வழியாக பெங்களூருக்கு குழாய் வழியாக எரிவாயு கொண்டு செல்ல கெயில் நிறுவனம் திட்டமிட்டது. இந்தத் திட்டத்துக்காக தமிழ்நாட்டின் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஆகிய 7 மாவட்டங்கள் வழியாக குழாய்கள் பதிக்கும் பணியை கெயில் நிறுவனம் மேற்கொண்டது.

எனினும், தங்கள் விளை நிலங்கள் வழியே குழாய்களைப் பதித்தால் விளை நிலங்கள் பாதிக்கப்படும் என்று கூறி விவசாயிகள் பல கட்டப் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனையடுத்து விவசாயிகளை அழைத்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் தமிழக அரசு கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தியது.

அதனைத் தொடர்ந்து, விவசாய விளை நிலங்கள் வழியே குழாய்களைப் பதிப்பதை கைவிட்டு நெடுஞ்சாலைகளின் வழியே குழாய்களைப் பதிக்குமாறும், ஏற்கனவே விளை நிலங்களில் பதிக்கப்பட்ட குழாய்களை அகற்றுமாறும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என்றும் கெயில் நிறுவனத்தை தமிழக அரசு கேட்டுக் கொண்டது.

தமிழக அரசின் இந்த முடிவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் கெயில் நிறுவனம் மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீது தலைமை நீதிபதி ஆர்.கே.அகர்வால், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வு விசாரணை மேற்கொண்டது.

இந்த வழக்கின் முடிவில், திட்டமிட்டபடியே கெயில் நிறுவனம் குழாய்களைப் பதிக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

மேலும், திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என கெயில் நிறுவனத்துக்கு தமிழக அரசு பிறப்பித்த உத்தரவையும் உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

இந்தத் திட்டத்தில் பொதுமக்கள் நலன் சார்ந்த பல அம்சங்கள் இருப்பதால், திட்டத்தை செயல்படுத்தும் வகையில் விவசாயிகளை மாநில அரசு சமாதானப்படுத்த வேண்டும் என்று அந்தத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

8 mins ago

இந்தியா

27 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

1 hour ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்