மாநில அரசின் நிர்வாகம் சீர்கெட்டுள்ளது: பழ. நெடுமாறன் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் ஆளும்கட்சி இரு அணிகளாக பிரிந்து மோதிக் கொண்டிருப்பதால் அரசு நிர்வாகம் முற்றிலும் சீர் கெட்டிருப்பதாக, தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ. நெடுமாறன் குற்றஞ்சாட்டினார்.

இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள மீன வர்கள் மற்றும் படகுகளை விடுதலை செய்யக் கோரியும், டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளிடம் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வலி யுறுத்தியும், ராமேசுவரம் பஸ் நிலையம் எதிரே தமிழர் தேசிய முன்னணி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ. நெடு மாறன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் கண். இளங்கோ முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் பழ. நெடுமாறன் பேசியதாவது:

கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்ததன் விளைவாக தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் துயரங்களை அனுபவித்து வருகின்றனர். இது வரையிலும் இலங்கை கடற்படையினரால் 700-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான படகுகள் சேதப் படுத்தப்பட்டுள்ளன. இதனைத் தடுக்க வேண்டிய இந்திய கடற்படை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

டெல்லியில் விவசாயிகள் ஒரு மாதமாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை சந்திக்காமல் பிரதமர் அலட்சியம் காட்டி வருகிறார். தமிழகத்தில் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளது. ஆளும் கட்சி இரண்டாகப் பிரிந்து மோதிக் கொண்டிருப்பதால், மாநில அரசு நிர்வாகம் சீர்கெட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

55 mins ago

விளையாட்டு

46 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

இந்தியா

3 hours ago

ஆன்மிகம்

3 hours ago

மேலும்