கூடங்குளம் முதல் அணு உலை இன்று அர்ப்பணிப்பு: பிரதமர், ரஷ்ய அதிபர், முதல்வர் தொடங்கிவைப்பு

By செய்திப்பிரிவு

கூடங்குளம் முதலாவது அணு உலையை நாட்டுக்கு அர்ப்பணிக் கும் விழா இன்று நடைபெ றுகிறது.

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டின் தொழில்நுட்ப உதவியுடன், தலா ஆயிரம் மெகா வாட் உற்பத்தி திறனுள்ள இரு அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் முதல் அணு உலையில், பணிகள் அனைத்தும் முடிந்து 13.7.2013 அன்று மின் உற்பத்தி தொடங்கப் பட்டது. படிப்படியாக ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தியை இந்த அணு உலை எட்டிய நிலையில், இங்கு உற்பத்தி யான மின்சாரம் 22.10.2013 அன்று மத்திய மின் தொகுப்பில் இணைக்கப்பட்டது.

தொடர்ந்து 31.12.2014 முதல் வணிக ரீதியான மின் உற்பத்தி தொடங்கப்பட்டது. இதில் தமிழகத் துக்கு 563 மெகாவாட், கர்நாட கத்துக்கு 221, கேரளத்துக்கு 133, புதுச்சேரிக்கு 33.5, தெலங்கானா வுக்கு 50 மெகாவாட் மின்சாரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதேவேளை, 2-வது அணு உலையிலும் பணிகள் நிறைவுற் று, இதில் தொடர் அணு பிளவு சோதனை நிறைவுற்று, மின் உற்பத் திக்கு தயார் நிலையில் உள்ளது.

இந்நிலையில் கூடங்குளம் முதலாவது அணு உலையை நாட் டுக்கு அர்ப்பணிக்கும் விழா இன்று நடைபெறுகிறது. இவ்விழா, ரஷ்ய தலைநகர் மாஸ்கோ, டெல்லி, சென்னை மற்றும் கூடங்குளம் அணுமின் நிலைய வளாகம் ஆகிய இடங்களில் இன்று மாலை 3.30 மணிக்கு ஒரே நேரத்தில் நடைபெறுகிறது.

காணொலி காட்சி மூலம் மாஸ் கோவில் இருந்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், டெல்லியில் இருந்து பிரதமர் மோடி, சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் பங்கேற்று, கூடங்கு ளம் முதல் அணு உலையை நாட் டுக்கு அர்ப்பணிக்கின்றனர். சென் னையில் நடைபெறும் விழாவில் தமிழ்நாடு மின் உற்பத்திக் கழக தலைவர் சாய்குமார், எரிசக்தித் துறை கூடுதல் தலைமை செயலா ளர் ராஜிவ் ரஞ்சன், தமிழக தலைமை செயலர் ராம மோகன ராவ் உள்ளிட்டோர் பங்கேற்கின் றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

19 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

உலகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்