சட்டவிரோதமாக பணம் பெற்றதாக சிபிஐ வழக்கு: ஜவாஹிருல்லாவுக்கு ஓராண்டு சிறை- தண்டனையை உறுதி செய்தது நீதிமன்றம்

By செய்திப்பிரிவு

வெளிநாடுகளில் இருந்து சட்ட விரோதமாகப் பணம் பெற்றதாக சிபிஐ தொடர்ந்த வழக்கில், முன்னாள் எம்எல்ஏ ஜவாஹிருல்லாவுக்கு விதிக்கப் பட்ட ஓராண்டு சிறை தண்ட னையை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக பணம் பெற்ற தாக மனிதநேய மக்கள் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான எம்.ஹெச்.ஜவா ஹிருல்லா, மாநிலப் பொதுச் செயலாளர் எஸ்.ஹைதர்அலி மற்றும் எச்.சையது நிசார் அகமது, ஜி.எம்.சேக், நல்ல முகமது களஞ் சியம் ஆகியோர் மீது சிபிஐ லஞ்ச ஒழிப்பு பிரிவினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு விசா ரணை சென்னை எழும்பூர் கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் ‌நீ‌‌திம‌ன்ற‌த்‌தி‌ல் நடந்துவந்தது.

சிபிஐ குற்றச்சாட்டில், ‘‘கடந்த 1997 டிசம்பர் 15 முதல் 2000 ஜூன் 20 வரையிலான காலகட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து ரூ.1 கோடியே 54 லட்சத்து 88 ஆயிரத்து 508-ஐ ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் சட்டவிரோதமாகப் பெற்றுள்ளனர். இதற்கு மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியிடம் எந்தவொரு முன்அனுமதியும் பெறவில்லை. எனவே, ஜவாஹிருல்லா உள்ளிட்ட 5 பேர் மீதும் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது’’ என்று கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை எழும்பூர் கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் ‌நீ‌‌திம‌ன்றம், ஜவாஹிருல்லாவுக் கும், ஹைதர் அலிக்கும் தலா ஓரா‌ண்டு ‌சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதமும், சையது நிசார் அகமது, ஜி.எம்.சேக், நல்ல முகமது களஞ்சியம் ஆகியோ ருக்கு தலா 2 ஆண்டுகள் ‌சிறை‌ தண்டனை, ரூ.40 ஆயிரம் அபராத மும் விதித்து தீர்ப்பளித்தது.

இதற்கிடையில், அந்த உத் தரவை எதிர்த்து ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் சென்னை மாவட்ட 6-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுவை 6-வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி கே.தனசேகரன் நேற்று விசாரித்து, ஜவாஹிருல்லா உள்ளிட்ட 5 பேருக்கும் விதிக்கப்பட்ட தண்டனை மற்றும் அபராதத்தை உறுதிசெய்து உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 mins ago

தமிழகம்

12 mins ago

இந்தியா

18 mins ago

தமிழகம்

28 mins ago

சினிமா

39 mins ago

சினிமா

53 mins ago

தமிழகம்

43 mins ago

இந்தியா

1 hour ago

கல்வி

56 mins ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

58 mins ago

வணிகம்

2 hours ago

மேலும்