பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற மேலும் 3 நாட்கள் அவகாசமா? - இன்னமும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என அதிகாரிகள் தகவல்

By குள.சண்முகசுந்தரம்

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக்கொள்வதற்கு மேலும் 3 தினங்கள் அவகாசம் அளிப்பது குறித்து இன்னமும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என நிதி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த நவம்பர் 8-ம் தேதி பண மதிப்பு நீக்க அறிவிப்பை வெளியிட்டார் பிரதமர் மோடி. இதையடுத்து, பொதுமக்கள் தங்கள் வசமிருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 30-ம் தேதிக்குள் வங்கிகளில் டெபாசிட் செய்து அதற்கு பதிலாக, செல்லும் ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டது. இந்தக் கெடு முடிந்ததும் மார்ச் முதல் தேதியிலிருந்து 31-ம் தேதி வரை, பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு களை ரிசர்வ் வங்கியின் குறிப்பிட்ட கிளைகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப் பட்டது.

இதையடுத்து, மார்ச் முதல் தேதி சென்னையிலுள்ள ரிசர்வ் வங்கி கிளையில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்வதற் காக பொதுமக்கள் திரண்டனர். ஆனால், பண மதிப்பு நீக்க நடவடிக்கை அமலில் இருந்த காலகட்டத்தில் வெளிநாட்டில் இருந்தவர்களிடம் மட்டுமே உரிய ஆவணங்களின் அடிப்படையில், செல்லாத ரூபாய் நோட்டுகள் பெற்றுக்கொள்ளப்படும் என ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பை வெளியிட்டதால் பொதுமக்கள் பெரிதும் அவதியுற்றனர்.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சரத் மிஸ்ரா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த பொதுநல வழக்கில், “மார்ச் 31-ம் தேதிவரை ரிசர்வ் வங்கி கிளைகளில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என்று பிரதமர் மோடியும் ரிசர்வ் வங்கியும் கொடுத்த வாக்குறுதிகள் மீறப்பட்டுள்ளதால் இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்” என்று கோரியிருந்தார்.

கடந்த 6-ம் தேதி இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, “ஏற் கெனவே உறுதியளித்தபடி பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி ஏற்றுக்கொள்ள மறுப்பது குறித்து மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் ைஉரிய விளக்கம் அளிக்க வேண்டும்” என உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.

இந்த நிலையில், உச்ச நீதிமன்றத் தில் இருக்கும் வழக்கை சுமுகமாக எதிர்கொள்ளும் வகையில் மார்ச் 29-ம் தேதியிலிருந்து 3 நாட்களுக்கு பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு களை வங்கிக் கிளைகளிலேயே மாற்றிக்கொள்வது குறித்து மத்திய நிதி அமைச்சகம் தீவிர ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சக அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது கூறியதாவது:

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொடுப்பது குறித்து நிதி அமைச்சகத்தின் உயரதி காரிகள் மட்டத்தில் முதல்கட்ட ஆலோ சனை நடத்தப்பட்டது. அப்போது, பொதுமக்கள் தங்கள் வசம் உள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மார்ச் 29-ம் தேதியிலி ருந்து 31-ம் தேதிக்குள் வங்கிக் கிளை களில் செலுத்தி அல்லது உரிய அடை யாள ஆவணங்களை காண்பித்து மாற்றிக்கொள்வது தொடர்பாக விவா திக்கப்பட்டது. மேலும் 10 எண்ணிக்கை கொண்ட பழைய ரூபாய் நோட்டுகள் அல்லது அதிகபட்சம் பத்தாயிரம் ரூபாய் வரை ஒரு நபருக்கு ஒரே ஒருமுறை மட்டும் மாற்றித்தரலாம் அல்லது வங்கிக் கணக்கில் செலுத்த அனுமதிக்கலாம் என்றும் விவாதிக்கப் பட்டது. எனினும் இதுகுறித்து அதிகாரப் பூர்வமாக இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படாததால் முறையான அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

இவ்வாறு அந்த அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

21 mins ago

இந்தியா

40 mins ago

சினிமா

49 mins ago

விளையாட்டு

56 mins ago

கருத்துப் பேழை

13 mins ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

மேலும்