பதவியேற்ற பிறகு முதல்முறையாக டெல்லி சென்றார்: பிரதமருடன் எடப்பாடி பழனிசாமி இன்று சந்திப்பு

By செய்திப்பிரிவு

‘நீட்’ தேர்வு, ஹைட்ரோ கார்பன் விவகாரங்கள் குறித்து பேசுகிறார்

பதவியேற்ற பிறகு முதல்முறையாக டெல்லி சென்றுள்ள முதல்வர் எடப் பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்திக்கிறார். அப்போது ‘நீட்’ தேர்வு, ஹைட்ரோ கார்பன் திட்டம், கேரள, கர்நாடக அரசுகளின் தடுப்பணை விவகாரங்கள் குறித்து பேசுகிறார்.

தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி, கடந்த 16-ம் தேதி பதவியேற்றார். அவருடன் 30 அமைச்சர்களும் பதவியேற்றனர். இதையடுத்து, சட்டப்பேரவையில் கடந்த 18-ம் தேதி, தனது அரசுக் கான பெரும்பான்மையை நிரூபித் தார். அதன்பின், 20-ம் தேதி தலைமைச் செயலகத்துக்கு சென்று முறைப்படி முதல்வர் பணிகளை எடப்பாடி பழனிசாமி தொடங்கினார். முதல்வராக பதவியேற்ற பழனிசாமிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்திருந்தார்.

கடந்த 24-ம் தேதி கோவை ஈஷா யோகா மையத்தில் நடந்த சிவராத்திரி விழாவில் பிரதமர் நரேந்திர மோடியுடன் எடப்பாடி பழனிசாமியும் பங்கேற்றார். அப் போது பிரதமரை தனியாக சந்தித் துப் பேசினார். இதைத் தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 27-ம் தேதி டெல்லி சென்று பிரதமரை சந்திக்க உள்ளதாக தெரிவித்தார்.

அதன்படி, டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்து பேசுகிறார். இதற்காக நேற்றிரவு 7.30 மணிக்கு ஜெட் ஏர்வேஸ் விமா னத்தில் அவர் டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவருடன் நிதியமைச்சர் ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் அதிகாரிகள் சென்றனர். முதல்வராக பதவி யேற்ற பிறகு எடப்பாடி பழனிசாமி முதல்முறையாக டெல்லி சென்றுள் ளார். இன்று பிற்பகல் 3 மணிக்குமேல் பிரதமரை முதல்வர் சந்திக்கிறார். அப்போது பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் அளிப்பார் என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

தேசிய அளவில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்பு களுக்கான ‘நீட்’ நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு இத்தேர்வில் இருந்து தமிழகம் விலக்கு பெற்றது. இதைத் தொடர்ந்து, ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தரமாக விலக்கு பெறுவதற்கான சட்டத் திருத்த மசோதா, சமீபத்தில் நடந்த சட்டப் பேரவை கூட்டத் தொடரில் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டத் திருத்தத்துக்கு மத்திய அரசு மற்றும் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற வேண்டியது அவசியம். அப்போது தான் சட்டம் முழுமை பெறும். திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் இதை வலியுறுத்தி வருகின்றன. எனவே, ‘நீட்’ தேர்வுக்கான சட்டத் திருத்தத்துக்கு மத்திய அரசின் ஒப்புதலை பெறுவது தொடர்பான கோரிக்கையை பிரதமர் மோடியிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்துவார் என தெரிகிறது.

ஹைட்ரோ கார்பன் திட்டம்

டெல்டா மாவட்டமான புதுக் கோட்டையின் நெடுவாசல் பகுதி யில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகளும் பொதுமக்களும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக அரசியல் கட்சியினர், இளைஞர்கள், மாணவர்களும் களமிறங்கி உள்ளனர். தற்போதைய அரசியல் சூழலில், இத்திட்டத்தை தமிழகத்துக்குள் கொண்டுவராமல் தடுப்பது அதிமுகவுக்கு அவசிய மானதாக இருக்கிறது. எனவே, இத்திட்டத்துக்கு அளித்த ஒப்புதலை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் பிரதமரிடம் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்துவார்.

வறட்சி நிவாரணம்

கர்நாடக அரசு மேகேதாட்டுவில் அணை கட்டுவதை தடுக்கவும், கேரள அரசு சிறுவாணியில் தடுப்பணை கட்டுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு பிரதமருக்கு ஏற்கெனவே முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். இதுபற்றியும் இந்த சந்திப்பின்போது பிரதமரிடம் முதல்வர் எடுத்துரைப்பார்.

மேலும், வார்தா புயல் பாதிப் புக்காக ரூ.22,573 கோடியும், வறட்சி நிவாரணப் பணிகளுக் காக ரூ.39,565 கோடியும் மத்திய அரசு வழங்க வேண்டும் என தமிழக அரசு கோரியுள்ளது. தமிழக முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் இருந்தபோது, இது பற்றி பிரதமரிடம் நேரில் வலியுறுத்தினார்.

இதையடுத்து மத்திய அரசு அமைத்த குழுவினர், புயல் மற்றும் வறட்சி பாதிப்புகளை பார்வையிட்டு சென்றனர். ஆனால், தமிழக அரசு கோரிய தொகை இதுவரை விடுவிக்கப்படவில்லை. எனவே, இந்த நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று பிரதமரிடம் முதல்வர் கோருகிறார். இதுதவிர, மீனவர்கள் பிரச்சினை, ஜிஎஸ்டி, உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஏற்படும் பாதிப்புகள், அவற்றுக்கான நிவாரணம் உள்ளிட்டவை தொடர்பாகவும் விரிவான கோரிக்கை மனுவை முதல்வர் அளிக்கிறார்.

பிரதமரை சந்தித்த பிறகு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஆகியோரையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க வாய்ப்புள்ளதாக தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

வணிகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

க்ரைம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

உலகம்

9 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்