அக்டோபர் 2-ம் வாரம் முதல் விவசாயிகள் பயிர்க் கடன் தள்ளுபடி: கூட்டுறவுத் துறை அதிகாரிகள் தகவல்

By கி.கணேஷ்

தமிழகத்தில் பயிர்க் கடன் தள்ளுபடி தொடர்பான முழு ஆய்வுப் பணிகளும் முடிந்து, அக்டோபர் மாதம் 2-ம் வாரத் தில் பயனாளிகளுக்குக் கடன் தள்ளுபடிக்கான பணிகள் தொடங் கும் என கூட்டுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்து, முதல்வராக ஜெயல லிதா பதவியேற்ற அன்றே, தேர்தல் அறிக்கையில் கூறியபடி தலைமைச் செயலகத்தில் பயிர்க் கடன் தள்ளுபடி தொடர்பான கோப்பில் கையெழுத்திட்டார். இது தொடர்பான அரசாணையும் வெளியிடப்பட்டது. தொடர்ந்து, கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக, கடன் பெற்ற விவசாயிகள், நிலம் ஆகியவை சர்வே எண் வாரியாக கணக்கெடுக்கப்பட்டன. அதன்பின், பயிர்க் கடன் தள்ளு படிக்கான வழிகாட்டும் நெறிமுறை கள் கூட்டுறவுத் துறையால் வெளியிடப்பட்டன.

இந்நிலையில், தமிழக சட்டப் பேரவையில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்தார். அதில், ‘‘விவசாயிகளின் தள்ளுபடி செய்ய வேண்டிய கடன் மற்றும் வட்டி உள்ளிட்ட மொத்தத் தொகை ரூ.5,780 கோடி. இந்தத் தொகை திரும்ப செலுத்தப்படும் வரையுள்ள வட்டியுடன் கூட்டுறவு வங்கிகளுக்கு அரசால் திரும்ப செலுத்தப்படும்.

இந்தத் தள்ளுபடியால் 8 லட் சத்து 35 ஆயிரத்து 360 குறு மற்றும் 8 லட்சத்து 58 ஆயிரத்து 785 சிறு விவசாயிகள் பயன் பெறுவார்கள். இக்கடன் தள்ளுபடி திட்டத்துக்காக இந்த நிதியாண்டுக்கு ரூ.1,680.73 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது’’ என அறிவித்துள்ளார்.

இந்நிலையில், அக்டோபர் மாதம் 2-வது வாரத்தில் இருந்து பயனாளிகளின் கடன்கள் தள்ளுபடி பணிகள் தொடங்குகிறது. இது தொடர்பாக கூட்டுறவுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

ஏற்கெனவே வெளியிடப்பட் டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் படி, பயனாளிகள் பட்டியல் கள அளவில் 100 சதவீதம் ஆய்வு செய்யப்படுகிறது. இப்பணிகள் ஆகஸ்ட் 2-வது வாரத்தில் முடியும். அதன்பின், பயனாளிகளின் பட்டியலை, இதர மாவட்ட அலுவலர்களைக் கொண்ட குழு ஆய்வு செய்யும். குறிப்பாக, பயனாளிகள் பட்டியலில் 10 சதவீதம் மட்டும் முழுமையாக ஆய்வு செய்யப்படும். இப்பணிகள் ஆகஸ்ட் இறுதியில் முடியும்.

அதன்பின், இறுதி பயனாளிகள் பட்டியல், அந்தந்த கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் பொதுமக்கள் பார்வைக்கு வைக் கப்படும். பட்டியல் தொடர்பான ஆட்சேபங்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும். அவற்றை, மண்டல அளவிலான குழு மற்றும் கூட்டுறவு சங்க பதிவாளர் தலைமையிலான குழுவும் ஆய்வு செய்து இறுதி முடிவு எடுக்கும். இப்பணிகள் செப்டம்பர் மாத இறுதியில் முடியும். இதன் பிறகு அக்டோபர் 2-ம் வாரத்தில், கடன் தள்ளுபடி பணிகள் தொடங்கும். அதுவரை பயனாளிகளிடம் இருந்து எந்தத் தொகையும் வசூலிக்கப்படாது. ஏற்கனவே கடன் தொடர்பாக பெறப்பட்ட தொகை குறித்த அறிவிப்பை இப்பணிகள் முடிந்ததும் அரசு வெளியிடும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

20 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

8 hours ago

மேலும்