சிலை கடத்தல் வழக்கில் தீனதயாள் சரண்: ஆய்வு செய்ய டெல்லி நிபுணர்கள் வருகை

By செய்திப்பிரிவு

சாமி சிலைகள் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட தீனதயாள், போலீஸில் சரண் அடைந்தார். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மீட்கப்பட்ட சிலைகளை ஆய்வு செய்ய டெல்லியில் இருந்து தொல் லியல் நிபுணர்கள் வரவுள்ளனர்.

சென்னை ஆழ்வார்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலை அருகே முரேஸ்கேட் சாலையில் உள்ள ஒரு பங்களா வீட்டில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கடந்த 31-ம் தேதி சோதனை நடத்தினர். அப்போது கல்லால் செய்யப்பட்ட 54 பழங்கால சாமி சிலைகளை பறிமுதல் செய்தனர். சோதனையின்போது, வீட்டின் உரிமையாளர் தீனதயாள் (78) இல்லை. அங்கிருந்த அவரது கூட்டாளிகள் மான்சிங் (58), குமார் (58), ராஜாமணி (60) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 3 பேரும் சிலைகளை வெளிநாடுகளுக்கு கடத்திச் செல்லும் ஏஜென்ட்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது.

அந்த பங்களா வீட்டில் 2 அறைகளில் பல சிலைகள், பழங்கால ஓவியங்கள் கண்டுபிடிக் கப்பட்டன. சோதனை நடந்த வீட்டை பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபி பிரதீப் வி.பிலிப் நேற்று காலை பார்வையிட்டார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

கடந்த 3 நாட்களாக நடத்தப் பட்ட சோதனையில் மொத்தம் 71 கற்சிலைகள், 41 ஐம்பொன் சிலைகள், 75 பழமையான ஓவியங் கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சிலைகள் அனைத்தும் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை யானவை. வீட்டின் உரிமையாளர் தீனதயாளை சரண் அடையச் சொல்லி சம்மன் அனுப்பியிருந் தோம். அவர், நேற்று முன்தினம் இரவு 7.30 மணி அளவில் கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள சிலைகள் கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் முன்பு ஆஜராகி சரண் அடைந்தார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகி றோம். இவ்வாறு அவர் கூறினார்.

பாஸ்போர்ட் முடக்கம்

சிலைகள் கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் கூறும்போது, ‘‘தீனதயாளின் பாஸ்போர்ட்டை முடக்கி வைத்திருந்தோம். ஹாலந்து நாட்டில் அவருக்கு இருந்த வங்கிக் கணக்கு, பெங்களூரில் 4 வங்கிகளில் இருந்த கணக்கு மற்றும் தமிழகத்தில் இருந்த வங்கிக் கணக்குகளையும் முடக்கி வைத்திருந்தோம். எழும்பூர் 10-வது நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்துவோம்’’ என்றார்.

மத்திய நிபுணர்கள் வருகை

கைப்பற்றப்பட்ட சிலைகள் அனைத்தும் திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில் வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அந்தச் சிலைகளை டெல்லியில் இருந்து வரும் மத்திய தொல்லியல் துறை நிபுணர்கள் ஆய்வு செய்ய உள்ளனர். அவர்கள் இன்று அல்லது நாளை சென்னை வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

16 mins ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்