ஜல்லிக்கட்டு பிரச்சினை: மெரினாவில் திரண்ட போராட்டக்காரர்களுடன் தமிழக அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

By பிடிஐ

ஜல்லிக்கட்டு கோரி சென்னை மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களுடன் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், கே.பாண்டியராஜ் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள், பொது மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், தமிழக அரசு சார்பில் போராட்டக்காரர்களுடன் இன்று (புதன்கிழமை) அதிகாலை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்துவதில் அரசு உறுதியாக இருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக சட்டத்திருத்தம் கொண்டு வர, குடியரசுத்தலைவரை அணுக உள்ளதாக அரசு தரப்பில் போராட்டக்காரர்களிடம் எடுத்துரைக்கப்பட்டதாகத் தெரிகிறது.

ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள், பொது மக்கள் உள்ளிட்டோர் கடந்த 4 நாட்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் செவ்வாய்க்கிழமை ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மெரினாவில் போராட்டம் நடத்தி வரும் இளைஞர்களிடம் கலைந்து போகச்சொல்லி போலீஸார் 4 முறை பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் போலீஸாரின் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அதைத்தொடர்ந்து மயிலாப்பூர் தாசில்தார் சிவ ருத்ரய்யா தலைமையில் 4 அரசு அதிகாரிகள் பேச்சுவார்தை நடத்தியும் பயனில்லை. முதல்வர் நேரில் வந்து பேச வேண்டும் என கூறி, போராட்டத்தை மாணவர்கள் தொடர்ந்தனர்.

போராட்டம் தொடர்ந்து நீடித்து வருவதால் அப்பகுதியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

நிலைமை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் மற்றும் அமைச்சர் கே.பாண்டியராஜன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் இன்று (புதன்கிழமை) அதிகாலையில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது 50 அதிமுக எம்.பி.க்களும் ஜல்லிக்கட்டு நடக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்துவர் என்று கூறியுள்ளனர்.

அத்தோடு இந்த விவகாரம் தொடர்பாக சட்டத்திருத்தம் கொண்டு வர, குடியரசுத்தலைவரை அணுக உள்ளதாகவும் அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

35 mins ago

கல்வி

28 mins ago

இந்தியா

25 mins ago

தமிழகம்

31 mins ago

ஓடிடி களம்

38 mins ago

இணைப்பிதழ்கள்

12 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

உலகம்

2 hours ago

மேலும்