மத்திய அரசு நடவடிக்கை எடுத்து இலங்கை பறிமுதல் செய்த படகுகளை மீனவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

இலங்கை கடற்படையினர் பறி முதல் செய்துள்ள படகுகளை தமிழக மீனவர்களிடம் ஒப்படைக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

திருச்சி விமானநிலையத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று அளித்த பேட்டி:

இலங்கை அரசு தமிழக மீனவர்களின் படகுகளை அரசு டமையாக்க உள்ளதாக மகிந்த சமர வீரா என்ற அமைச்சர் அறி வித்துள்ளதாக செய்தி வெளியாகி யுள்ளது. இது உண்மையாக இருக்கும்பட்சத்தில், இது இந்திய அரசுக்கு விடுக்கப்படும் மிரட்டல் ஆகும். கடந்த டிசம்பர் 15-ம் தேதி பிரதமர் மோடியைச் சந்தித்த போது இதுகுறித்து பேசினேன்.

இந்நிலையில், இப்போது இலங்கை அரசு தமிழர்களின் படகு களை அரசுடமையாக்க உள்ளதாக அறிவித்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்டுள்ள படகுகளைத் தமிழக மீனவர்களிடம் ஒப்படைக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அதேபோல் பொங்கலுக்குள் ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் வறட்சி காரணமாக தற்கொலை செய்தும், அதிர்ச்சியில் மாரடைப் பாலும் இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப் பீடு வழங்க வேண்டும். விவசாய தொழிலாளர்களுக்கும் இழப்பீடு தர வேண்டும் என வலியுறுத்தி ஜன வரி 6-ம் தேதி மதுரையில் எனது தலைமையில் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெறும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

க்ரைம்

24 mins ago

சுற்றுச்சூழல்

30 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

வர்த்தக உலகம்

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்