மகள், தந்தையை எரித்துக் கொன்ற வழக்கில் இருவருக்கு தூக்கு; 3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை - திருப்பூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

By செய்திப்பிரிவு

மகள், தந்தை எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், இருவ ருக்கு தூக்குத் தண்டனை விதித்து திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

திருப்பூர் அருகே மாணிக்காபுரத் தைச் சேர்ந்த விசைத்தறித் தொழிலாளி தங்கவேல்(45), மனைவி தமிழ்ச்செல்வி(38). இவர்கள் மகள் மகாலட்சுமி (11). கடந்த 2015 அக்.5-ம் தேதி புத்தகங்கள் வாங்கச் சென்ற தந்தை, மகள் மாயமாகினர். இது தொடர்பாக தமிழ்ச்செல்வி அளித்த புகாரின்பேரில், பல்லடம் போலீஸார் விசாரித்து வந்தனர்.

இதையடுத்து மங்கலம் - பல்லடம் செல்லும் சாலை, வேலம்பாளையம் மாரப்பன் தோட்டம் அருகே எரிந்த நிலையில் தங்கவேலுவின் சடலத்தை போலீஸார் மீட்டனர்.

கோவை மாவட்டம் வடவள்ளி பாலகணேசபுரம் என்ற குடியிருப் புப் பகுதியை ஒட்டிய காட்டுப் பகுதியில், பாலியல் வன்கொடு மைக்கு உள்ளாக்கப்பட்டும், எரித்துக் கொலை செய்யப்பட்ட நிலையிலும் மகாலட்சுமியின் உடலை போலீஸார் மீட்டனர். இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

விசாரணையில், பல்லடம் அருகே மாணிக்காபுரம் பாரக் காட்டைச் சேர்ந்த விசைத்தறி உரிமையாளர் செல்வம் (எ) கூளை செல்வத்திடம், தங்கவேல் ரூ.60 ஆயிரம் கடன் வாங்கி உள்ளார். பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறால் தந்தை மற்றும் மகளை கடத்திச் சென்று, செல்வம் கொலை செய்ததாக தெரியவந்தது.

இது தொடர்பாக ராசக்கவுண் டம்பாளையம் பனைமரத்து தோட் டத்தைச் சேர்ந்த தெய்வசிகாமணி (40), நடுவேலாம்பாளையம் மேற்கு நீலித்தோட்டத்தைச் சேர்ந்த நாக ராஜ்(28), நாதேகவுண்டம் பாளையம் வி.கள்ளிபாளையத் தைச் சேர்ந்த ஆனந்தன் (28), கோவை மாவட்டம் வீரகேரளம் அருகே பாலகணேசபுரத்தைச் சேர்ந்த ரங்கராஜ்(40), செல்வத்தின் மனைவி பகதீஸ்வரி (39) ஆகியோரை பல்லடம் போலீஸார் கைது செய்து சிறையில் அடைந்தனர்.

திருப்பூர் மகளிர் நீதிமன்றத் தில் நடைபெற்று வந்த வழக்கின் தீர்ப்பை, நீதிபதி நேற்று அறிவித் தார். அதில், செல்வம் (எ) கூளை செல்வத்துக்கு தங்கவேலுவை கொலை செய்ததற்காக ஆயுள் தண்டனை, சிறுமியை கொலை செய்ததற்காக தூக்கு தண்டனை, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதற்காக 10 ஆண்டு சிறைத் தண்டனை, தடயங்களை அழித்ததற்காக 5 ஆண்டு சிறைத் தண்டனை, சிறுமியை கடத்தியதற் காக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

கூட்டு சதியில் ஈடுபட்டது, சிறுமியை கொலை செய்தது, பாலியல் வன்கொடுமைக்கு உள் ளாக்கியது ஆகியவற்றுக்காக ரங்கராஜுக்கு தூக்குத் தண்ட னையும், 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.

தெய்வசிகாமணி, நாகராஜ், ஆனந்தன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட் டது. போதிய ஆதாரங்கள் இல்லாததால், செல்வத்தின் மனைவி பகதீஸ்வரி விடுவிக் கப்பட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

9 mins ago

இந்தியா

5 mins ago

இந்தியா

35 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்