தமிழகம் முழுவதும் 39 காவல் அதிகாரிகள் கூடுதல் எஸ்பி.க்களாக பதவி உயர்வு

By செய்திப்பிரிவு

தமிழகம் முழுவதும் உதவி ஆணை யர்கள் மற்றும் துணை கண்காணிப் பாளர்களாகப் பணியாற்றும் அதிகாரி கள் கூடுதல் எஸ்பி.க்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

தமிழகம் முழுவதும் 1987-ம் ஆண்டு காவல் பணியில் இணைந்த கேட்டகிரி-1 எனப்படும் சட்டம் - ஒழுங்கை கவனிக் கும் போலீஸ் அதிகாரிகள் தற்போது அடுத்தடுத்த பதவி உயர்வு மூலம் டிஎஸ்பி.க்களாகவும், உதவி ஆணை யர்களாகவும் பல்வேறு இடங்களில் பணியில் உள்ளனர். இவர்களுக்கான பதவி உயர்வு குறித்து டிஜிபி சார் பில் அளிக்கப்பட்ட பரிந்துரை அடிப் படையில் தற்போது கூடுதல் எஸ்பி அல்லது கூடுதல் துணை ஆணையர் என்கிற பதவிக்கு உயர்த்தப்படுகி றார்கள். அதன்படி தமிழகம் முழு வதும் பதவி உயர்வு பெற்றுள்ள 39 அதிகாரிகள் விவரம்:

கலிதீர்த்தான், மோகன்குமார், இளங் கோவன், சுந்தரவதனம், ராமு, குண சேகரன், அண்ணாமலை, ஜெயச்சந் திரன், மாரிராஜன், ராஜா ஸ்ரீனிவாஸ், மோஹன் நவாஸ், பிரிதிவிராஜன், ரவிகுமார், ரவிச்சந்திரன், சார்லஸ், விஜயகுமார், சுப்பராஜ், பிரேமானந்த், முத்துசாமி, கண்ணன், சுஷில்குமார், விஜயகுமார், கோவிந்தராஜ், கெங்கை ராஜ், கிரிதர், பாண்டியன், தியாகராஜ், முரளிதரன், ரவிச்சந்திரன், ஜேசுராஜ், ரமேஷ்பாபு, சேகர், மலைச்சாமி, சரவணகுமார், பொன் கார்த்திக்குமார், விஜய கார்த்திக்ராஜ், கீதாஞ்சலி, பாஸ்கரன், கணேசன் ஆகியோர்.

இதற்கான உத்தரவை உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி நேற்று வெளியிட்டுள்ளார்.

பொதுவாக டிஎஸ்பி அல்லது உதவி ஆணையர்கள் மூன்று நட்சத்திரம் மற்றும் கருப்புப் பட்டையுடன் சீருடை அணிவார்கள். தற்போது கிடைக்கும் பதவி உயர்வு மூலம் மூன்று நட்சத் திரங்களுக்குப் பதிலாக அசோக சின் னத்தை தோள் பட்டையில் அணிவார் கள். இவர்கள் ஏடிஎஸ்பி அல்லது ஏடிசி என அழைக்கப்படுவார்கள். பணி ஓய்வுபெறும் காலம் அதிகம் இருப்பின், துணை ஆணையர்களாக ஆகும் வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

27 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

10 hours ago

விளையாட்டு

12 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்