காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கில் மேல்முறையீடு இல்லை: புதுவை அரசு

By செய்திப்பிரிவு

காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கில் மேல்முறையீடு செய்வ தில்லை என புதுவை அரசு முடிவு எடுத்துள்ளது.

காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன். கடந்த 2004 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் படுகொலை செய்யப் பட்டார். இந்த கொலை வழக் கில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உட்பட 25 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை முதலில் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கில் குற்றவாளியான ரவிசுப்பிரமணியம் அப்ரூவரானார். வழக்கை வேறு மாநிலத்தில் விசாரிக்க வேண்டும் என்று சங்க ராச்சாரியார் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டதையடுத்து வழக்கு விசாரணையை புதுவை நீதி மன்றத்துக்கு உச்சநீதிமன்றம் மாற்றி உத்தரவிட்டது. இதை யடுத்து புதுவை அமர்வு நீதி மன்றத்தில் 9 ஆண்டுகளாக வழக்கு விசாரணை நடந்தது.

இந்த வழக்கில் 23.11.2013ல் முதன்மை நீதிபதி முருகன் தீர்ப் பளித்தார். அவரது தீர்ப்பில், சங்க ராச்சாரியார்கள் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உட்பட 23 பேரை யும் விடுதலை செய்து உத்தர விட்டார். இந்த வழக்கில் 90 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம் என்றும் அவர் தீர்ப் பில் கூறியிருந்தார்.

இதற்கிடையே சங்கரராமன் கொலை வழக்கில் அப்பீல் செய்ய அப்போதைய துணை நிலை ஆளுநர் வீரேந்திர கட்டா ரியா உத்தரவிட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தன்னி டம் முழு விவரத்தையும் தெரிவிக் காமலேயே அதிகாரிகள் மேல்முறையீடு மனுவுக்கு கையெழுத்து பெற்றுவிட்டதாக கட்டாரியாவும் புகார் தெரிவித்தார்.

அதையடுத்து சில நாட் களில் வீரேந்திர கட்டாரியா திடீரென துணைநிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து மத்திய அர சால் நீக்கப்பட்டார். இதற்கிடை யில் அட்டர்னி ஜெனரல் முகுல் ரகோத்வி, சங்கரராமன் கொலை வழக்கை மேல் முறையீடு செய்ய எந்தவித முகாந் திரமும் இல்லை என கருத்து தெரி வித்திருந்தார்.

இந்நிலையில் சங்கரராமன் கொலை வழக்கை மேல்முறையீடு செய்வது இல்லை என்று புதுவை அரசு தற்போது முடிவு எடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட ஆணையில், சட்டத்துறை மூலம் ஆய்வு செய்ததில் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய தேவையில்லை என்று கருத்து தெரிவிக்கப்பட்டது.

இந்த அரசு ஆணையின் தகவல்களை உயர்நீதிமன்றத்தில், புதுவை அரசின் வழக்கறிஞர் மூலமாக தெரிவித்துள்ளனர். இதனால் ஏற்கெனவே அரசால் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனு விலக்கிக் கொள்ளப்பட உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே அரசின் இந்த முடிவை விமர்சித்து பல அமைப்புகள் கண்டன சுவரொட்டிகளை நகரில் ஒட்டியுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

மேலும்