3 விசைப்படகுகள் நாட்டுடமையாக்கப்பட்ட விவகாரம்: தமிழக மீனவர் கோரிக்கையை ஏற்க இலங்கை நீதிமன்றம் மறுப்பு

By செய்திப்பிரிவு

இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர் களின் விசைப்படகுகளை நாட்டு டமையாக்க நீதிமன்றம் உத்தர விட்டது. இது தொடர்பாக படகின் உரிமையாளர்கள் தாக்கல் செய்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

ராமேசுவரம் மீன்பிடித் துறை முகத்திலிருந்து கடலுக்குச் சென்ற தேவதாஸ், பிரான்சிஸ் ஆகியோருக்குச் சொந்தமான 2 விசைப்படகுகளை கைப்பற்றி அதிலிருந்த 12 மீனவர்களை கடந்த ஜுலை 5-ல் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அதேபோல், ஜுலை 8-ல் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மண்ட பத்தைச் சேர்ந்த ஒரு விசைப்படகை கைப்பற்றி அதிலிருந்து 4 விசைப் படகு மீனவர்களை கைது செய்தனர். இந்த 16 மீனவர்கள் மீதும் இலங்கை கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடிக்கும் வெளிநாட்டுப் படகுகளுக்கு அபராதம் மற்றும் தண்டனை விதிக் கும் புதிய சட்டத்தின் கீழ் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.

இலங்கை கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட இழுவை மடி மூலம் மீன்பிடித்தது ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் 16 தமிழக மீனவர்களுக்கும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஜூலை 13-ம் தேதி நீதிபதி ஜூட்சன் தீர்ப்பளித்தார். மேலும், இந்த 16 பேருக்கு விதித்த சிறை தண்டனையை 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைப்பதாகவும், அவர்கள் அனைவரையும் உடனே நாடு கடத்தவும் அவர் உத்தரவிட்டார். மீண்டும் அவர்கள் இலங்கை கடற் பகுதிக்கு மீன்பிடிக்க வந்தால் 2 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் தெரி வித்தார். அதோடு, ஆக. 28-ம் தேதி படகின் உரிமையாளர்கள் உரிய ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். ஆனால், அன்றைய தினம் படகு உரிமை யாளர்கள் யாரும் ஆஜராகாத தால் 3 விசைப்படகுக ளையும் நாட்டு டமையாக்க ஊர் காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது.

படகின் உரிமையாளர்கள் 3 பேரும், ஊர்காவல்துறை நீதிமன் றத்தில், தாங்கள் நேரில் ஆஜராக கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்த மனு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்றம் போதிய அவகாசம் வழங்கியும் படகுகளுக்கு யாரும் உரிமை கோராததால்தான் அவை நாட்டுடமையாக்கப்பட்டன எனச் சுட்டிக்காட்டி மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். இதைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் மாகாண நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய படகு உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

மீனவர்களின் வலைகள் பறிப்பு

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத் துறையைச் சேர்ந்த செல்வம் என்பவரின் பைபர் படகு, தமிழ்ச்செல்வம் என்பவரின் பைபர் படகு, சிவபாலன் என்பவரின் பைபர் படகு, மணிவண்ணன் என்பவரின் 2 பைபர் படகுகள் ஆகியவற்றில் 21 மீனவர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு கோடியக்கரை கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு இயந்திர படகில் வந்த இலங்கை கடற்படையினர் நாட்டு வெடிகுண்டு, அரிவாள், உருட்டுக் கட்டை ஆகியவற்றைக் காட்டி மீனவர்களை மிரட்டி வலைகள், பிடித்து வைத்திருந்த மீன்கள் ஆகியவற்றைப் பறித்துச் சென்றுவிட்டனர். இவற்றின் மதிப்பு ரூ.8 லட்சம்.

வலைகள், மீன்களை இழந்து நேற்று கரை திரும்பிய மீனவர்கள், இதுகுறித்து பஞ்சாயத்தாரிடம் தெரிவித்தனர். அவர்கள் அளித்த புகாரின்பேரில் வேதாரண்யம் கடலோர காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

43 mins ago

விளையாட்டு

34 mins ago

தமிழகம்

58 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

மேலும்