புற்றுநோயை உண்டாக்க வாய்ப்பு: ரேஷன் கடைகளில் சர்க்கரை, உப்பு விற்க கூடாது - அரசுக்கு நடிகை கவுதமி வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

புற்றுநோயில் இருந்து மீண்டு வந்த நடிகை கவுதமி, அந்நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத் தும் வகையில் விருதுநகரில் உள்ள வே.வ.வன்னியப்பெருமாள் மக ளிர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச் சியில் பேசியதாவது:

நமது பழக்க வழக்கங்களில் உள்ள குறைபாடுகளே புற்று நோய்க்கு முக்கிய காரணம். வெள்ளையாக காணப்படும் அனைத்து பொருட்களும் சுத்தமா னவை அல்ல. வெண்மைக்காக பல ரசாயனங்கள் சேர்க்கப்படுகின் றன. வெள்ளை சீனி, வெள்ளை உப்பு, மைதா போன்ற உணவு களை தவிர்ப்பது நல்லது. புகைப் பிடித்தல், மது, பிளாஸ்டிக் பாட்டி லில் உள்ள தண்ணீரைக் குடித் தல் போன்றவற்றை தவிர்க்க வேண் டும். புற்றுநோயை தொடக்கத்தி லேயே கண்டறிந்தால், சிகிச்சை மூலம் குணமாக்க முடியும். அதற்கு நானே நேரடி சாட்சி.

வெள்ளை சீனி, வெள்ளை உப்பு போன்றவை புற்றுநோயை உண்டாக்கும் வாய்ப்பு உள்ளது. இவற்றை ரேஷன் கடைகளில் விற்கக் கூடாது. நாட்டுச் சர்க்கரை, பனை வெல்லம், கருப்பட்டி, கடல் உப்பு போன்றவற்றை அரசு வழங்க வேண்டும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

வணிகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

இணைப்பிதழ்கள்

9 hours ago

க்ரைம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்