சுப்பிரமணியன் சுவாமிக்கு எதிராக மேலும் 2 அவதூறு வழக்குகள்: முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்தார்

By செய்திப்பிரிவு

பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமிக்கு எதிராக மேலும் 2 அவதூறு வழக்குகள் முதல்வர் ஜெயலலிதா சார்பில் தொடரப் பட்டுள்ளன.

முதல்வர் ஜெயலலிதா தொடர்பான சில கருத்துகளை தனது ட்விட்டர் பக்கத்தில் சுப்பிர மணியன் சுவாமி கூறியிருந்தார். அவரது இந்தக் கருத்துகள் முதல்வர் ஜெயலலிதாவின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தில் வேண்டுமென்றே வெளியிடப் பட்டுள்ளதாகக் கூறி, சுப்பிர மணியன் சுவாமிக்கு எதிராக 2 அவதூறு வழக்குகள் தொடரப் பட்டுள்ளன.

முதல்வர் ஜெயலலிதா சார்பில் சென்னை மாநகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் எம்.எல்.ஜெகன் சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் இதற் கான 2 மனுக்களை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர் பார்க்கப்படுகிறது.

சுப்பிரமணியன் சுவாமிக்கு எதிராக சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா சார்பில் ஏற்கெனவே 3 அவதூறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த புதிய வழக்குகளையும் சேர்த்து சுப்பிரமணியன் சுவாமிக்கு எதிரான அவதூறு வழக்குகளின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

9 hours ago

மேலும்