ஐஜி பொன். மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் தஞ்சாவூர் பெரிய கோயிலில் திடீர் ஆய்வு: பக்தர்களை வெளியேற்றி கதவை பூட்டிவிட்டு சிலைகள் கணக்கெடுப்பு

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர் பெரிய கோயிலில்ஐஜி பொன். மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் நேற்று பிற்பகல், 3 மணி நேரம் திடீர் ஆய்வு செய்தனர்.

தஞ்சாவூர் பெரிய கோயிலைக் கட்டிய ராஜராஜ சோழன், அவரது பட்டத்தரசியான உலகமாதேவி ஆகியோரது ஐம்பொன் சிலைகள் 60 ஆண்டுகளுக்கு முன்காணாமல் போயின. இந்த சிலைகளை குஜராத் அருங்காட்சி

யகத்தில் இருந்து கடந்த ஜூன் மாதம் 1-ம் தேதி தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் மீட்டு, தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஒப்படைத்தனர்.

24  மணி நேர பாதுகாப்பு

தஞ்சாவூர் பெரிய கோயிலில்உள்ள அர்த்த மண்டபத்தில் 24 மணிநேரமும் துப்பாக்கிஏந்திய போலீஸாரின் பாதுகாப்பில் ராஜராஜ சோழன் மற்றும் உலகமாதேவி சிலைகள் உள்ளன.

இந்நிலையில் தஞ்சாவூர் பெரிய கோயிலில் இருந்து வேறு சில சிலைகள் மாயமானது குறித்தும், சில சிலைகள் மாற்றப்பட்டு உள்ளது குறித்தும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையில், தஞ்சாவூர் பெரிய கோயில் கட்டுமானம் குறித்த, தஞ்சாவூர் தாமிரப் பட்டயம் மாயமாகியுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதனால் தஞ்சாவூர் பெரிய கோயிலில் மாயமான பழமையான கலைப் பொக்கிஷங்கள் குறித்துபோலீஸார் எப்போது வேண்டுமானாலும் விசாரித்து, வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளலாம் என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கூறி வந்தனர்.

இந்நிலையில், சிலை கடத்தல்தடுப்பு பிரிவு போலீஸார் நேற்றுகாலை முதல் தஞ்சாவூர் பெரியகோயிலுக்கு வந்தவண்ணம் இருந்தனர். 3 ஆய்வாளர்கள் தலைமையில் மொத்தம் 50 போலீஸார்,  கோயிலுக்குள் பல்வேறு இடங்களைப் பார்வையிட்டு விசாரணை செய்தனர்.

கதவு பூட்டப்பட்டதுஇதையடுத்து, மதியம் 1.30மணிக்கு கோயிலின் உள்ளேஇருந்த பக்தர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு, இரண்டாவது பிரகாரத்தில் உள்ள ராஜராஜன் நுழைவு வாயில் கதவு பூட்டப்பட்டது. பின்னர் மதியம் 2 மணியளவில் ஐஜி பொன். மாணிக்கவேல்,ஏடிஎஸ்பிகள் ராஜாராம், மாதவன்ஆகியோர் பெரிய கோயிலுக்கு வந்தனர். அவர்களைத் தொடர்ந்து,ஏற்கெனவே வந்திருந்த சிலைகடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார்அனைவரும் மீண்டும் கோயிலுக்குள் சென்றனர்.

பின்னர், கோயிலின் உள்பிரகாரத்துக்கு செல்ல பக்தர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. பத்திரிகையாளர்கள் ராஜராஜன் நுழைவு வாயில் அருகேதடுத்து நிறுத்தப்பட்டனர்.

ஐஜி பொன். மாணிக்கவேல்தலைமையிலான போலீஸார் அர்த்த மண்டபத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள பல்வேறுசுவாமி சிலைகளையும், நடராஜர்சன்னதியில் உள்ள ஏராளமான ஐம்பொன் சிலைகளையும் ஆய்வு செய்தனர்.

மதியம் 2 மணிக்கு தொடங்கிய இந்த ஆய்வு மாலை 5 மணி வரை 3 மணி நேரம் நடைபெற்றது. ஆய்வு செய்யும்போது அர்த்த மண்டபம் மற்றும் நடராஜர் சன்னதிக்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

சிலைகள் கணக்கெடுப்பு

இதுகுறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி ராஜாராமன் கூறியதாவது:

தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஏற்கெனவே பல சிலைகள் மாயமாகியுள்ளதும், சிலைகள்மாற்றப்பட்டுள்ளதும் தொடர்பாககாவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இக்கோயிலில் புராதன சிலைகள் நிறைய உள்ளன. அவற்றில் ஏதேனும் மாறுதல் செய்யப்பட்டுள்ளதா எனக் கண்டறிய, சிலைகள்குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

தமிழ் எழுத்துகள் பொறிப்புஇதில் எத்தனை சிலைகள்பழமையானவை என ஆய்வுசெய்யப்பட்டது. இந்த ஆய்வில் ஒருசில விவரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சில சிலைகளில் சமீபகாலத்தில் தமிழில் பயன்படுத்தப்படும் எழுத்துகளைப் போல பொறிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தப்படும்.

குஜராத்திலிருந்து மீட்கப்பட்ட ராஜராஜ சோழன், உலகமாதேவி சிலைகள் உண்மையானவைதான் என்பது குறித்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் உள்ளது.

அதில் நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது. அதுகுறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

23 mins ago

தமிழகம்

28 mins ago

சுற்றுலா

45 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

சுற்றுலா

2 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

3 hours ago

உலகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்