ஜெ.வுக்கு தரப்பட்ட மருந்துகள் என்னென்ன?

By செய்திப்பிரிவு

ஜெயலலிதாவுக்கு 2014 முதல் 2016-ம் ஆண்டு வரை கொடுக்கப்பட்ட மருந்துகள் குறித்த ஆவணங்களை நாளை தாக்கல் செய்யுமாறு டாக்டர் சிவக்குமாருக்கு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெய லலிதா மரணம் குறித்து விசா ரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம், ஜெய லலிதாவின் தனி டாக்டர் சிவக் குமாருக்கு நேற்று ஒரு சம்மன் அனுப்பியுள்ளது. டாக்டர் சிவக் குமார், ஏற்கெனவே ஜனவரி 8, மார்ச் 14, மே 2 மற்றும் 26 ஆகிய தேதிகளில் விசாரணை ஆணையம் முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்நிலையில் நாளை (28-ம் தேதி) மறு விசாரணைக்கு ஆஜ ராகுமாறு அவருக்கு ஆறுமுக சாமி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

நாளை ஆஜராகும்போது ஜெய லலிதாவுக்கு 2014 முதல் 2016-ம் ஆண்டு வரை என்னென்ன சிகிச்சைகள் அளிக்கப்பட்டன, சிகிச்சை அளித்த மருத்துவர்களின் விவரங்கள், கொடுக்கப்பட்ட மருந்துகளின் விவ ரங்கள் போன்றவற்றை ஆணை யத்தில் தெரிவிக்க வேண்டும். இதுகுறித்த ஆவணங்களையும் தாக்கல் செய்ய வேண்டும் என டாக்டர் சிவக்குமாருக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், அதே தினத்தில் அப்போலோ மருத்துவமனை சட்டப்பிரிவு மேலாளர் மோகன் குமார், மருத்துவர்கள் மீரா, தவபழனி ஆகியோரும் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

சினிமா

3 hours ago

இந்தியா

12 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

7 hours ago

வணிகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

தொழில்நுட்பம்

10 hours ago

சினிமா

11 hours ago

க்ரைம்

11 hours ago

மேலும்