உயர் நீதிமன்ற உத்தரவு எதிரொலி; 2-ம் வகுப்பு வரை குழந்தைகளுக்கு வீட்டுப் பாடம் எதுவும் தரக் கூடாது: பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தும் வகையில், 2-ம் வகுப்பு வரை குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது என பள்ளிக்கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், வட்டார கல்வி அதிகாரிகள் ஆகி யோருக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்ப தாவது:

பள்ளிகளில் 2-ம் வகுப்பு வரை குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் எதுவும் தரக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் ஓர் உத்தரவை பிறப்பித்தது. உயர் நீதிமன்ற உத்தரவை நடை முறைப்படுத்தும் வகையில், 2-ம் வகுப்பு வரை குழந்தை களுக்கு வீட்டுப்பாடம் எதுவும் தரப்படவில்லை என்பதை அனைத் துப் பள்ளிகளும் உறுதிசெய்ய வேண்டும்.

ஆலோசனைக் கூட்டம்

இதுதொடர்பாக ஆய்வு அதிகாரிகளான கல்வி அதிகாரி கள் பள்ளிகளின் நிர்வாகி களுடன் உடனடியாக ஆலோ சனை கூட்டம் நடத்த வேண் டும். உயர் நீதிமன்ற உத்தர வின் முக்கியத்துவத்தை உணரச் செய்து அதை நடைமுறைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்த வேண்டும்.

மேலும், குழந்தைகளின் புத்த கப் பை சுமையையும் வீட்டுப் பாடத்தின் அளவையும் குறைக்க வேண்டும் என்ற சிபிஎஸ்இ உத்த ரவை அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளும் கறாராக நடைமுறைப் படுத்த வேண்டும். தமிழக அரசின் அங்கீகாரம் பெற்று இயங்கும் அனைத்துப் பள்ளி களும் பொது பள்ளிக்கல்வி வாரியத்தால் நிர்ணயிக்கப்பட்ட பாடப் புத்தகங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

30 mins ago

இந்தியா

36 mins ago

இந்தியா

41 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

49 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

55 mins ago

ஆன்மிகம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

9 hours ago

மேலும்