தீபம் ஏற்றும் மலையில் ட்ரெக்கிங்: 12 வெளிநாட்டினர் கைது

By பிடிஐ

தடை விதிக்கப்பட்டுள்ள திருவண்ணாமலையில் மலையேற்றத்தில் ஈடுபட்டதாக லித்துவேனிய நாட்டைச் சேர்ந்த 12 பேர் இன்று கைதுசெய்யப்பட்டனர்.

இந்தியாவில் புனித யாத்திரைக்காக வந்திருந்த வெளிநாட்டவர்கள், ரமணாஸ்ரமம் அருகிலுள்ள ஸ்கந்தாஸ்ரத்திலருந்து தீபம் ஏற்றப்படும் மலையில் ட்ரெக்கிங் சென்றுள்ளனர்.

வனத்துறையினருக்கு கிடைத்த தகவலின்படி, மலைப்பகுதிக்கு விரைந்து மலையேற்றக் குழுவினரை கைது செய்தனர்.

புனித மலைக்கு தாங்கள் செல்ல விரும்பியதாகவும், தடைவிதிக்கப்பட்டுள்ளது குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும் அவர்கள் கூறியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து எச்சரித்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

காத்திகை தீபத் திருவிழாவின்போது அதிக எண்ணிக்கையிலான மக்கள் மலையேற்றத்தில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இங்கு அடிக்கடி நிகழும் மலையேற்றத்தில் சில வெளிநாட்டினர் காணாமல்போய்விட்டதாகவும் கூறப்படுகிறது.

கடந்த மார்ச் மாதம் தேனி மாவட்டம் குரங்கனி மலைப்பகுதியில் 36 பேர் கொண்ட குழு மலையேற்றத்தில் ஈடுபட்டபோது அங்கு உருவான காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

இந்தியா

27 mins ago

சினிமா

44 mins ago

வலைஞர் பக்கம்

1 hour ago

கல்வி

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

இணைப்பிதழ்கள்

12 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சுற்றுலா

2 hours ago

மேலும்