கருணாஸ் மேலும் இரண்டு வழக்குகளில் கைது: என்னென்ன பிரிவுகள் ஒரு பார்வை

By செய்திப்பிரிவு

முதல்வர் மற்றும் காவல் அதிகாரியை விமர்சித்து கைது செய்யப்பட்ட கருணாஸை மேலும் இரண்டு வழக்குகளில் 13 பிரிவுகளின் கீழ் போலீஸார் கைது செய்தனர். இதனால் முதல் வழக்கில் அவர் ஜாமினில் வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நடிகர் கருணாஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கட்டப்பஞ்சாயத்து செய்வதாக எழுந்த புகாரின் பேரில் தி.நகர் காவல் துணை ஆணையர் அரவிந்தன் உத்தரவின் பேரில் வடபழனி போலீஸார் நடவடிக்கை எடுத்தனர். இதில் கோபமடைந்த கருணாஸ் கடந்த செப். 16 அன்று வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பட்டம் நடத்தினார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பதவியைப் பற்றியும் அவர் தான் அடித்து விடுவேன் என்று தன்னைப் பார்த்து பயப்படுவதாகவும் கருணாஸ் பேசினார். ஒரு நாளைக்கு குடிப்பதற்கே ரூ.1 லட்சம் செலவு செய்வதாகத் தெரிவித்த அவர் கொலை செய்வதாக இருந்தால் என்னிடம் சொல்லிவிட்டுச் செய் என்று தொண்டர்களைப் பார்த்துப் பேசினார்.

தனது ஆட்களின் காலை ஒடி, கையை ஒடி என்று அதிகாரி உத்தரவிட்டால் அந்த உத்தரவிட்ட அதிகாரியின் காலை ஒடி என்று பேசினார். ஐபிஎஸ் அதிகாரி அரவிந்தனை நேரடியாக வம்பிழுத்த அவர், ''உனக்கு என்ன அப்படி ஈகோ, பதவி இருக்கும் அதிகாரம்தானே உன் காக்கிச்சட்டையைக் கழற்றிவிட்டு வா பார்த்துக்குவோம்'' என்று திரும்பத் பேசினார்.

இதையடுத்து கருணாஸ் மீது நுங்கம்பாக்கம் காவல் உதவி ஆய்வாளர் ராஜசேகரன் என்பவர் அளித்த புகாரின் பேரில் கொலைமுயற்சி (307), உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார் அவரைக் கைது செய்து வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் வேலூர் சிறையில் உள்ள கருணாஸை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கடந்த ஏப்ரல் மாதம் ஐபிஎல் போட்டிகளுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் ரசிகர்கள் தாக்கப்பட்டனர், போலீஸார் மீது கொலைவெறி தாக்குதல் நடந்தது. இந்தப் போராட்டத்தில் இரு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கருணாஸும் வழக்கில் சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று ஐபிஎல் போராட்டத்தில் பங்கேற்ற கருணாஸ் மீது பதிவு செய்யப்பட்ட இரண்டு வழக்குகளில் போலீஸார் அவரை கைது செய்தனர்.

அவர்மீது கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வழக்கு 1 : சட்டவிரோதமாக கலகம் விளைவிக்கும்நோக்கத்துடன் கூடுவது(146) உயிரைப் பறிக்கும் ஆயுதங்களுடன் கூடுவது(148), ரசிகர்களைச் சட்டவிரோதமாக தடுத்தல் (341), அதிகாரிகளின் உத்தரவை மீறிச் செயல்படுவது (188) மற்றும் தடை செய்யப்பட்ட இடத்தில் கூடுவது 41(6)mcp act

வழக்கு 2: சட்டவிரோதமாக ஒன்றுகூடி செயல்படுவது (147), 148, ரசிகர்களை சட்டவிரோதமாகத் தடுத்தல் (341), ஆபாசமாகப் பேசுதல் 294(b), காயம் ஏற்படுத்துவது (323), ஆயுதத்தை வைத்து காயம் ஏற்படுத்துவது (324), கொலை முயற்சி (307), ஆயுதங்களை வைத்து கொலை மிரட்டல் 506(ii)

ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் கருணாஸ் 9-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது இந்த வழக்கிலும் அவரைக் கைது செய்துள்ளதால், முதல்வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

12 hours ago

விளையாட்டு

13 hours ago

இந்தியா

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்