ஸ்டெர்லைட்டை எதிர்த்த ஸ்னோலினுக்கு துப்பாக்கி குண்டு; ஹெச்.ராஜா மீது ஒப்புக்கு வழக்கா? - வைகோ காட்டம்

By செய்திப்பிரிவு

ஹெச்.ராஜா மீது ஒப்புக்கு வழக்கு போடப்பட்டிருப்பதாக, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை எழும்பூரில் வைகோ இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய வைகோ, “ஈழ விடுதலைக்காக போராடிய திலீபன் நினைவு நாளில் திலீபன், பிரபாகரன் கனவுகளை நினைவாக்க சூளுரை மேற்கொண்டிருக்கிறோம். இந்தியாவில் கொடூரமான சூழ்நிலை உருவாகியிருக்கிறது. மதச்சார்பினைமையை வலியுறுத்தும் கோவிந்த பன்சாரே, கல்புர்கி, தபோல்கர், கவுரி லங்கேஷ் ஆகியோர் இந்துத்துவ சக்திகளால் கொல்லப்பட்டனர். அவர்களின் மரணங்களுக்கு நீதி இல்லை. ஒரே நாடு, ஒரே மதம், ஒரே கட்சி என இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைக்கின்றனர்.

தொடரும் பெரியார் சிலை அவமதிப்புக்கு ஹெச்.ராஜா தான் காரணம். பெரியார் சிலை அவமதிப்பால் மக்கள் வேதனை தழலில் இருக்கின்றனர். அம்பை ஏவியவர்கள்தான் குற்றவாளி. அந்த அம்பை ஏவியது ஹெச்.ராஜா தான் என அனைவருக்கும் தெரியும். அவர் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்திக்கிறார்.

காவல்துறை பாதுகாப்புடன் மேடையில் பேசுகிறார். ஒப்புக்கு வழக்கு பதிவு செய்திருக்கிறோம் என்று சொல்கிறார்கள். ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து ஸ்னோலின் என்ற மாணவியை முகத்தை பார்த்து சுட்டனர். ஆனால், ஹெச்.ராஜா மீது ஒப்புக்கு வழக்கு போட்டிருக்கின்றனர்” என தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

5 hours ago

தமிழகம்

4 mins ago

சினிமா

14 mins ago

இந்தியா

22 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

5 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்