அணுக்கழிவு குறித்து பா.ரஞ்சித் பேசாதது ஏன்?- சீமான் கேள்வி

By செய்திப்பிரிவு

இயக்குநர் ரஞ்சித் நாட்டின் மிகப்பெரிய பிரச்சினையான அணுக்கழிவு குறித்துப் பேசாமல், ஏன் ஆயிரம் வருடப் பழமையான அரசன் குறித்துக் கேள்வி எழுப்ப வேண்டும் என்று சீமான் கேட்டுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இதுகுறித்து திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறும்போது, ''வரலாற்றில் இருந்து படிக்கும்போது ஒவ்வொருவருக்கும் ஒரு பார்வை இருக்கும். ரஞ்சித், தனது பார்வையில் ராஜராஜ சோழனின் காலத்தை இருண்ட காலமாகப் பார்க்கிறார். நாங்கள் அதைத் தமிழ்ச் சமூகத்தின் பெருமைமிக்க காலமாக அதைப் பார்க்கிறோம். ஆனால், பொற்காலம் என்று எதையும் நாங்கள் சொன்னதில்லை.

எவ்வளவு விமர்சனங்கள் வைத்தாலும் அருள்மொழிச் சோழன் என்கிற ராஜராஜ சோழன், அரசர்க்கரசன் எங்களுடைய பெருமைக்குரிய பாட்டன்தான். ரஞ்சித்தின் குற்றச்சாட்டுக்கு, மணியரசன் ஆதாரப்பூர்வமாகப் பதிவுகளை எடுத்து வைக்கிறார்.

ஆனால் எங்களின் கேள்வி, நாட்டின் மிகப்பெரிய பிரச்சினையான அணுக்கழிவு குறித்துப் பேசாமல் இயக்குநர் ரஞ்சித், ஏன் ஆயிரம் வருடப் பழமையான அரசன் குறித்துக் கேள்வி எழுப்ப வேண்டும் என்பதுதான்'' என்றார் சீமான்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

39 mins ago

இலக்கியம்

6 hours ago

தமிழகம்

59 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்