பள்ளிகளில் கட்டாய தமிழ் கற்றல் சட்டம்: அடுத்த ஆண்டு முதல் அமலாகிறது

By செய்திப்பிரிவு

பள்ளிகளில் தமிழ் படிப்பதை கட்டாயமாக்கும் கட்டாய தமிழ் கற்றல் சட்டம் அடுத்த ஆண்டு முதல் அமலாகிறது.

தமிழ்நாடு கட்டாய தமிழ் கற்றல் சட்டம்-2006-ன் படி தமிழகத்தில் தனியார் பள்ளிகள் உள்பட அனைத்து பள்ளிகளிலும் ஒன்று முதல் 10-ம் வகுப்பு வரை மாணவர்கள் தமிழை ஒரு பாடமாக எடுத்து படிக்க வேண்டும். இந்த கட்டாய தமிழ் கற்றல் சட்டம் வரும் கல்வி ஆண்டு (2015-2016) முதல் படிப்படியாக அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் டி.சபீதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அடுத்த ஆண்டு ஒன்றாம் வகுப்பு, அதன்பிறகு 2-ம் வகுப்பு வரை என படிப்படியாக 10-ம் வகுப்பு வரை அமல்படுத்தப்படும். ஆண்டு வாரியாக நடைமுறைப்படுத்தப்படும் வகுப்புகள், ஆண்டுகள் விவரம் அட்டவணையில் உள்ளவாறு:-

2015-2016 - ஒன்றாம் வகுப்பு

2016-2017 - 1, 2-ம் வகுப்புகள்

2017-2018 - 1, 2, 3-ம் வகுப்புகள்

2018-2019 - 1 முதல் 4-ம் வகுப்பு வரை

2019-2020 - 1 முதல் 5-ம் வகுப்பு வரை

2020-2021 - 1 முதல் 6-ம் வகுப்பு வரை

2021-2022 - 1 முதல் 7-ம் வகுப்பு வரை

2022-2023 - 1 முதல் 8-ம் வகுப்பு வரை

2023-2024 - 1 முதல் 9-ம் வகுப்பு வரை

2024-2025 - 1 முதல் 10-ம் வகுப்பு வரை

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

22 mins ago

கருத்துப் பேழை

15 mins ago

தமிழகம்

2 mins ago

தமிழகம்

53 mins ago

சினிமா

58 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

வலைஞர் பக்கம்

2 hours ago

கல்வி

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்