விபத்துகள், போக்குவரத்து விதிமீறல்களைத் தடுக்க சாலைகளில் ஒளிரும் எல்இடி மின் விளக்குகள் போக்குவரத்து போலீஸார் நடவடிக்கை 

By செய்திப்பிரிவு

விபத்துகள் மற்றும் போக்குவரத்து விதி மீறல்களைத் தடுக்கும் வகை யில் சாலையில் ஒளிரும் எல்இடி மின் விளக்குகளை சோதனை முறையில் போக்குவரத்து போலீ ஸார் மெரினா காமராஜர் சாலை யில் பொருத்தியுள்ளனர்.

போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், விபத்துகளைத் தடுக் கவும் சென்னை போக்குவரத்துப் பிரிவு போலீஸார் பல்வேறு நடவடிக் கைகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சிக்னல்கள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.

ஆனால், வாகன ஓட்டிகள் பலர், போக்குவரத்து போலீஸார் சிக்னல்களில் இல்லை என்றால் சாலை விதிகளை மதிப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து தற்போது சென்னையில் உள்ள அனைத்து சிக்னல்களிலும் போக்குவரத்து போலீஸார் பணியில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், இரவு நேரங்களில் சிக்னல்களை கவனிக்காமல் அதிவேகமாக செல்லும் வாகனங்களால் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தடுக்கும் வகையில் சாலையில் ஒளிரும் எல்இடி சிக்னல்களை அமைக்க போக்குவரத்து போலீஸார் முடிவு செய்தனர். அதன்படி, மெரினா காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை மற்றும் டிஜிபி அலுவலகம் எதிரே உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை என 3 இடங்களில் ஒளிரும் எல்இடி சிக்னல்கள் சோதனை அடிப்படையில் தற்போது அமைக்கப்பட்டுள்ளன. சிறிய அளவிலான வேகத்தடைபோல் நீளமாக எல்இடி சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இவை சாலையோரம் பொருத் தப்பட்டுள்ள சிக்னல்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. எனவே சிக்னல்களில் பச்சை, மஞ்சள், சிகப்பு விளக்கு எரிந்தால் அதே போல் எல்இடி சிக்னலிலும் அதே வண்ணம் ஒளிரும். இதனால், வாகன ஓட்டிகள் தாங்கள் தொடர்ந்து வாகனத்தை இயக்க லாமா? நிற்கலாமா? என முடிவு செய்து கொள்ளலாம். இந்த திட்டம் வெற்றியடைந்தால் சென்னையில் உள்ள 436 சிக்னல்களிலும் இவற் றைப் பொருத்த போக்குவரத்து போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

42 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

4 hours ago

ஆன்மிகம்

3 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

மேலும்