காங்கிரஸ் கட்சியிலிருந்து கராத்தே தியாகராஜன் திடீர் சஸ்பெண்ட்

By செய்திப்பிரிவு

கராத்தே தியாகராஜன் காங்கிரஸ் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். திமுக காங்கிரஸ் உரசலில் தனிப்பட்ட முறையில் கருத்து தெரிவித்ததை அடுத்து இடைநீக்கம் என கூறப்படுகிறது.

அகில இந்திய பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் கமிட்டி மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் பரிந்துரையை ஏற்று காங்கிரஸ் கட்சியின் தென் சென்னை மாவட்டத்தலைவராக பதவி வகித்துவரும் கராத்தே தியாகராஜனை அவரது தொடர் கட்சிவிரோத நடவடிக்கை மற்றும் ஒழுங்கீனம் காரணமாக உடனடியாக கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்படுகிறார்”

என வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். எவ்வளவு காலம் இடைநீக்கம் என்பது குறித்து தகவல் இல்லை. காங்கிரஸ் கட்சியைவிட்டு இடைநீக்கம் செய்யவேண்டுமென்றால் 6 ஆண்டு இடைநீக்கம் மற்றும் விளக்கம் கேட்பு என்று இருக்கும். ஆனால் இந்த அறிவிப்பில் எந்தவித தகவலும் இல்லை.

சமீபத்தில் திமுக காங்கிரஸ் இடையே கே.என்.நேரு போன்றவர்கள் பேசிய அடிப்படையில் ஏற்பட்ட உரசலை தாமாக முந்திக்கொண்டு கராத்தே தியாகராஜன் ஊடகங்களில் பதிலளித்தார். அது காங்கிரஸ் தரப்புக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர்மீது நடத்தப்பட்ட விசாரணையின் முடிவில் இந்த நடவடிக்கை வந்திருக்கலாம் எனக்கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

மேலும்