தேசிய உறுப்பு மாற்று அமைப்புடன் மாநிலங்களை இணைக்கும் மத்திய அரசின் திட்டத்தால் தமிழக நோயாளிகள் பாதிக்கும் அபாயம்

By சி.கண்ணன்

அனைத்து மாநிலங்களின் உறுப்புதான அமைப்பை தேசிய அமைப்புடன் இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ள தால் தமிழகத்தில் மாற்று உறுப்புகளுக்காக பதிவுசெய்து காத்திருக்கும் நோயாளி களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

உடல் உறுப்பு தானம் குறித்தவிழிப்புணர்வு பொதுமக்களி டையே அதிகரித்துள்ளது. இதைச் சட்டப்படி செய்ய வேண்டும் என்பதற்காக மூளைச்சாவு உடல் உறுப்பு மாற்று திட்டம் 2008-ம்ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. பின்னர், இந்தமூளைச்சாவு உடல் உறுப்பு மாற்றுதிட்டம், தமிழ்நாடு உறுப்பு தான அமைப்பாக மாற்றப்பட்டது.

தமிழகம் முதலிடம்

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக அளவில் உடல் உறுப்பு தானம் செய்யப்படுகிறது. தொடர்ந்து 4-வது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ள தமிழக அரசுக்கு மத்திய அரசு விருது வழங்கி கவுரவித்துள்ளது. மாற்றுஉறுப்பு அமைப்பில் நோயாளி கள் உறுப்பு வேண்டி பதிவு செய் கின்றனர். தானமாக பெறப்படும் உறுப்புகள் பதிவு மூப்பு அடிப் படையில் நோயாளிகளுக்கு பொருத்தப்படுகிறது.தமிழகத்தில்மூளைச்சாவு அடைந்தவர்களிடம் பெறப்படும் உறுப்புகளால் ஏராளமானோர் மறுவாழ்வு பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களின் உறுப்பு தான அமைப்புகளையும் தேசிய அளவில் செயல்படும் தேசிய உறுப்பு மாற்று அமைப்புடன் (NOTTO) இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான பணிகளில் மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். தேசிய அளவில் பதிவு மூப்பின் அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும் என்பதால், உடல் உறுப்பு தானத்தில் முதலிடத்தில் உள்ள தமிழகம் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அமைப்பில் பதிவு

இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்படும் போது, எந்த மருத்துவமனையில் இறந்தாரோ அந்த மருத்துவமனையில் உறுப்பு வேண்டி பதிவு செய்து சிகிச்சைப் பெறும் நோயாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பின்னர், மற்ற நோயாளிகள் குறித்து பரிசீலிக்கப்படும். தமிழகத்தில் யாருக்கும் உறுப்பு தேவைப்படாத பட்சத்தில், அது தேசிய அமைப்பின் வழியாக மற்ற மாநில நோயாளிகளுக்கோ அல்லது இந்தியாவில் சிகிச்சைப் பெறும் வெளிநாட்டு நோயாளிகளுக்கோ உறுப்பு பொருத்தப்படும். இதுதான் நடைமுறை.

தமிழகம் பாதிப்பு

இந்தியாவில் மற்ற மாநிலங் களுடன் ஒப்பிடுகையில் தமிழகத் தில்தான் அதிக அளவு உடல் உறுப்பு தானம் நடைபெறுகிறது. தமிழகத்தில் உறுப்பு வேண்டி அமைப்பில் பதிவு செய்துள்ளநோயாளிகளுக்கு பதிவு எண் வழங்கப்படுகிறது. இதே நடைமுறையைத்தான் மற்ற மாநிலங்களும் பின்பற்று கின்றன. இந்நிலையில், அனைத்துமாநிலங்களின் உறுப்புதான அமைப்பையும் தேசிய அமைப் புடன் இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

முதல்கட்டமாக உறுப்பு வேண்டிமாநில உறுப்புதான அமைப்பு களில் பதிவு செய்துள்ளவர்களின் விவரங்களை, தேசிய அமைப்பில் பதிவு செய்யும் பணிகள் நடை பெற்று வருகின்றன. புதிதாக வருபவர்களுக்கு மாநிலம் மற்றும்தேசிய அமைப்பில் பதிவு செய்யப்படுகிறது. இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், உடல் உறுப்பு தானத்தில் முதலிடத்தில் உள்ள தமிழகம்தான் அதிகமாக பாதிக்கப்படும்.

உறுப்புகள் வீணாகும்

தேசிய அளவில் பதிவு மூப்பின் அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்படும் என்பதால், தமிழகத்தில் மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து தானமாக பெறப்படும் உடல் உறுப்புகள் தமிழர்களின் உயிரை காப்பாற்ற பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் வெளிநாட்டினர்கள்தான் பயன்பெறு வார்கள். தமிழகத்தில் இருந்துஅதிக தொலைவில் உள்ள வடமாநிலங்களுக்கு உறுப்புகள் எடுத்துச் செல்லும்போது, உறுப்பு கள் வீணாவதற்கும் அதிகம் வாய்ப்புள்ளது.

இவ்வாறு தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

11 mins ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

வணிகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

க்ரைம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

உலகம்

10 hours ago

மேலும்