தேர்ச்சி பெற்றால்தான் டாக்டராக பணியாற்ற முடியும்; எம்பிபிஎஸ் முடித்தவர்களுக்கு ‘நெக்ஸ்ட்’ புதிய தகுதி தேர்வு கட்டாயம்: அடுத்த ஆண்டுமுதல் அமல்படுத்துகிறது மத்திய அரசு

By சி.கண்ணன்

எம்பிபிஎஸ் முடித்தவர்களுக்கு புதிய தகுதித் தேர்வை அடுத்த ஆண்டு முதல் மத்திய அரசு அமல் படுத்த உள்ளது.

இந்தியாவில் இளநிலை மருத் துவப் பட்டப்படிப்பான எம்பிபிஎஸ் ஐந்தரை ஆண்டுகள் கொண்டது. கல்லூரியில் நான்கரை ஆண்டுகள் படித்த பின்னர், ஓராண்டு பயிற்சி டாக்டராக பணியாற்றுகின்றனர்.

இதையடுத்து, மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்து டாக்டராக பணியாற்றுகின்றனர். இந்நிலையில், எம்பிபிஎஸ் முடித்த வர்கள் National Exit Test (NEXT) என்ற ‘நெக்ஸ்ட்’ தகுதித் தேர்வை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு இந்த தேர்வை கொண்டு வர முயற்சி செய்த போது, நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. அதனால், அப்போது இந்த தேர்வை மத்திய அரசால் கொண்டுவர முடியவில்லை. தற்போது வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்த தேர்வுக்கான மசோதா நிறைவேற்றப்பட உள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு மருத்துவ அலுவலர் சங்கத்தின் செயலாளர் டாக்டர் கதிர்வேல், அரசு சாரா சேவை மருத்துவர்கள் சங்கத்தின் செயலாளர் டாக்டர் கார்த்திகேயன் ஆகியோர் கூறிய தாவது: எம்பிபிஎஸ் முடித்தவர் களுக்கு நெக்ஸ்ட் தேர்வை இந்த ஆண்டு மத்திய அரசு கொண்டுவர உள்ளது. இந்த ஆண்டு எம்பிபிஎஸ் முடித்தவர்கள் நீட் தேர்வு எழுதி மருத்துவப் பட்டமேற்படிப்புகளில் சேர்ந்துவிட்டதால், அடுத்த ஆண்டு முதல் தான் இந்த தேர்வு நடை முறைப்படுத்தப்படும்.

அதேநேரத்தில் எம்பிபிஎஸ் முடித்தவர்களுக்கு நெக்ஸ்ட் தேர்வு கட்டாயமாக்கப்படுவதால், மருத்துவப் பட்டமேற்படிப்பு களுக்கு அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வு இருக்குமா? இல்லையா? அல்லது நெக்ஸ்ட் தேர்வின் மதிப் பெண் நீட் தேர்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுமா என்பது இன்னும் தெளிவாக அறிவிக்கவில்லை. நெக்ஸ்ட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான், மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்து டாக்டராக பணி யாற்ற முடியும். 2017-ம் ஆண்டு இந்த தேர்வை மத்திய அரசு கொண்டுவர முயற்சி செய்த போது நெக்ஸ்ட் தேர்வு, எக்ஸிட் தேர்வு என்று சொல்லப்பட்டது. தற் போது அதே பெயரில் கொண்டு வரப்படுகிறதா அல்லது வேறு பெயர் வைக்கப்படுமா என்று தெரியவில்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

வெளிநாடுகளில் மருத்துவம்

இந்தியாவில் எம்பிபிஎஸ் படிப் பவர்களுக்கு மட்டுமின்றி, வெளி நாடுகளில் மருத்துவம் படித்துவிட்டு இந்தியா வருபவர்களுக்கு எக்ஸிட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுபற்றி லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன் நிறுவனத்தின் இயக் குநர் முகமது கனியிடம் கேட்ட போது, “பிலிப்பைன்ஸ், ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளில் மருத் துவம் படித்துவிட்டு இந்தியா வருப வர்கள் இந்திய மருத்துவக் கவுன் சில் நடத்தும் எப்எம்ஜிஇ (FMGE) என்ற தகுதித் தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும். அதன் பின்னரே, மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்து டாக்டராக பணியாற்ற முடியும்.

பின்னர், நீட் தேர்வு எழுதி மருத்துவப் பட்டமேற்படிப்புகள் படிக்க முடியும் என்ற நடைமுறை உள்ளது. நெக்ஸ்ட் தேர்வு நடைமுறைப்படுத்தப்படுவதால், வெளிநாடுகளில் மருத்துவம் படித்துவிட்டு வருபவர்கள் இனிமேல் எப்எம்ஜிஇ தேர்வை எழுதத் தேவையில்லை. நெக்ஸ்ட் தேர்வை மட்டும் எழுதி தேர்ச்சி பெற வேண்டும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்