குஜராத்தில் 35 கிராமங்களில் மின்சாரம் இல்லை; தமிழகத்தில் அனைத்து கிராமங்களிலும் மின்சாரம்!

By எச்.ஷேக் மைதீன்

கிராமங்களை மின் மயமாக்கும் திட்டத்தில் குஜராத் மாநிலத்தில் 35 கிராமங்களுக்கு மின்சார வசதி கிடைக்கவில்லை. தமிழகம் 100 சதவீதம், அதாவது அனைத்து கிராமங்களுக்கும் மின் வசதி அளித்துள்ளது. இதேபோல் மரபுசாரா எரிசக்தி, அரசு நிலையங்களில் மின் உற்பத்தி ஆகியவற்றில் குஜராத்தைவிட தமிழகம் அதிக மின் உற்பத்தி மேற்கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி முதல்வராக இருக்கும், குஜராத் மாநிலம் மின் துறையில் முதலிடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால், குஜராத் மாநில மின்துறை, மின்சார ஆணையத்துக்கு அளித்த தகவல் படி கடந்த நிதியாண்டில் 30 லட்சம் யூனிட் மின்சாரம் பற்றாக்குறை ஏற்பட்டதாகக் கூறப் பட்டுள்ளது. மாதாந்திர மின் விநியோகம் தொடர்பான அறிக்கையில், கடந்த நிதி யாண்டில் 88,488 மில்லியன் யூனிட் மின்சாரம் விநியோகித்துள்ளதாக குஜராத் மின்துறை தெரிவித்துள்ளது.

தொழிற்சாலைகள் அதிகமுள்ளதால், தமிழகத்துக்கு மாதத்துக்கு குறைந்தது 8,425 மில்லியன் யூனிட் மின்சாரம் தேவைப்படுவதாக தமிழக மின்துறை தெரி வித்துள்ளது. ஆனால், தமிழகத்தைவிட குறைவாக குஜராத் அரசுக்கு மாதந்தோறும் 7,042 மில்லியன் யூனிட் மட்டுமே தேவைப் படுகிறது.

மத்திய மின் தொகுப்பு இணைப்பு மூலம் தேவையான மின்சாரம் வாங்கும் வசதி குஜராத்துக்கு உள்ளது. தமிழக அரசால் 1,000 மெகாவாட் மட்டுமே வெளி மாநிலத்தில் மின்சாரம் வாங்க முடியும் என்ற நிலையிலேயே மின் தொகுப்பு இணைப்பு உள்ளது.

குஜராத் அரசுக்கு மத்திய அரசின் மின் நிலையங்களிலிருந்து, 3,467 மெகா வாட் மின்சாரம் நிரந்தர ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. ஆனால், குஜராத்தைவிட தேவை அதிகமான தமிழகத்துக்கு மத்திய அரசிடமிருந்து நிரந்தர ஒதுக்கீடாக 3,117 மெகாவாட் மட்டுமே கிடைக்கிறது.

உற்பத்தியைப் பொருத்தவரை குஜராத் மாநில அரசுக்குச் சொந்தமான நிலையங் களில் 7,220 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி யாகிறது. மேலும், 11,980 மெகாவாட் அளவுக்கு மின்சாரம் உற்பத்தி செய்ய தனியார் மின் நிலையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 7,598 மெகாவாட் மின்சாரம் அரசு நிலையங்களில் உற்பத்தியாகின்றன. அதேபோல், 9,287 மெகாவாட் உற்பத்தி ஆகும் அளவுக்கு தனியார் மின் நிலையங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. இதில், பெரும் பாலானவை மரபுசாரா எரிசக்தி உற்பத்தி யாகும். குஜராத்தில் பெரும்பாலான அனல் மின் நிலையங்கள் தனியார் வசமே உள்ளன.

இதர வகை மின் உற்பத்தியில் தமிழகம் முதலிடம்

சூரிய மின்சக்தி, காற்றாலை மற்றும் புதுப்பிக்கத்தக்க, சுற்றுச்சூழல் மாசுபடாத மின் உற்பத்தியில் குஜராத்தை பின்னுக்குத் தள்ளி தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் மொத்த உற்பத்தியில் 40.2 சதவீதம் மரபுசாரா எரிசக்தியில் பெறப் படுகிறது. அதாவது, தமிழகத்தில் 7,179 காற்றாலை நிலையங்களும், 20 மெகாவாட் சூரியசக்தி உற்பத்தியும், உயிரிக்கழிவு மூலம் 204 மெகாவாட், பசுமைக்கழிவு மின் உற்பத்தியில் 659 மெகாவாட்டும் கிடைக் கின்றன.

குஜராத்தில் காற்றாலை மின் நிலைய நிறுவு திறன் 3,164 மெகாவாட்டாகவே உள் ளது. இது தமிழக காற்றாலை மின் திறனில் பாதி அளவாகும். குஜராத்தில் சூரியசக்தி, உயிரிக்கழிவு மற்றும் பசுமைக்கழிவு மூலம் மொத்தம் 894 மெகாவாட் மட்டுமே உற்பத்தித் திறன் உள்ளது.

கிராமங்கள் மின் மயமாக்கல் திட்டத்தில், குஜராத்தில் மொத்தமுள்ள 18066 கிராமங் களில், 18,031 கிராமங்களுக்கு மட்டும் மின்சார வசதி கிடைத்துள்ளது. மீதமுள்ள 35 கிராமங்களுக்கு இன்னும் மின் இணைப்பு வழங்கவில்லை. தமிழகத்தில் மொத்தமுள்ள 15400 கிராமங்களில் அனைத்துக்கும் 100 சதவீதம் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

வாழ்வியல்

7 hours ago

தமிழகம்

8 hours ago

ஆன்மிகம்

7 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

மேலும்