சிக்கிய மாணவ, மாணவிகளை கண்டறிவதில் கடும் சிரமம்

By செய்திப்பிரிவு

மதுரையைச் சேர்ந்த தீயணைப்பு அதிகாரி திருமுருகன் நேற்று கூறியதாவது:

குரங்கணி மலையில் மலையேற்ற பயிற்சிக்கு திட்டமிட்ட கல்லூரி மாணவிகள் ஒரே குழுவாக செல்லவில்லை. தனித்தனி பிரிவாக பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பிட்ட தூரம் வரை சென்றுவிட்டு மீண்டும் தரையிறங்கியபோது, காட்டுத்தீ பரவியதை ஒரு குழுவினர் பார்த்துள்ளனர்.

இக்குழுவினர், பிற குழுவினரை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்று முடியாமல் போனது. பிற குழுவினர் காட்டுத் தீ சம்பவத்தில் சிக்கி இருக்கலாம் என அவர்கள் சந்தேகம் அடைந்தனர். இதன் பிறகே தப்பிய குழுவினர் மூலம் தீயணைப்பு, காவல்துறைக்கு தகவல் கிடைத்திருக்கிறது.

செங்குத்தாக இருக்கும் மலைப்பகுதிக்கு தீயணைப்பு வாகனங்களைக் கொண்டு செல்ல முடியாது. இதுபோன்ற சூழலில் மலைக்குள் மனிதர்களின் இருப்பிடத்தைக் கண்டறிவது கடினம். செல்போன் சிக்னலும் சரியாக கிடைக்காததால் தகவல்கள் துண்டிக்கப்பட்டன.

விலங்குகள் தாக்காது

இதன் காரணமாகவே மாணவர்கள் எந்த இடத்தில் இருக்கிறார்கள் என்பதை உடனடியாகத் தெரிந்துகொள்ள முடியவில்லை. காட்டுத் தீயின்போது, காட்டு விலங்குகள் பிற இடங்களுக்கு தப்பிச் செல்லும் என்பதால் காட்டுக்குள் உயிருடன் சிக்கியவர்களை தாக்க வாய்ப்பில்லை. இவ்வாறு தீயணைப்பு அதிகாரி திருமுருகன் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

16 mins ago

இந்தியா

35 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

1 hour ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்