இனிமேல்தான் ஆன்மிக அரசியலைப் பார்க்கப் போகிறீர்கள்: ரஜினி அதிரடி

By செய்திப்பிரிவு

இனிமேல்தான் ஆன்மிக அரசியலைப் பார்க்கப் போகிறீர்கள் என்று ரஜினிகாந்த் பேசினார்.

சென்னை வேலப்பன் சாவடியில் உள்ள தனியார் பல்கலைக்கழக வளாகத்தில் எம்ஜிஆர் சிலையை நடிகர் ரஜினிகாந்த் திறந்து வைத்தார். விழாவில் முன்னாள் மேயர் சைதை துரைசாமி, நடிகர்கள் நாசர், பிரபு, விஜயகுமார், நடிகைகள் சரோஜா தேவி, சச்சு, லதா, அம்பிகா, இயக்குனர் பி.வாசு, தயாரிப்பாளர் தாணு, வி.ஜி.சந்தோசம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து பல்கலைக்கழக மேடையில் மாணவர்கள் மத்தியில் ரஜினி பேசியதாவது:

''ஆன்மிக அரசியல் என்ன என்று மீண்டும் மீண்டும் கேட்கிறார்கள். உண்மையான, நேர்மையான, சாதி, மதமற்ற, அறவழியிலான, தூய்மையான அரசியல்தான் ஆன்மிக அரசியல். எல்லா ஜீவன்களும் ஒன்று என்றும், இறை நம்பிக்கை உள்ளதும் தான் ஆன்மிக அரசியல். அப்போ திராவிட அரசியலில் இதெல்லாம் இல்லையா என்றால் இனிமேல்தான் ஆன்மிக அரசியலைப் பார்க்கப் போகிறீர்கள். கொள்கை கேட்டால் தலை சுத்துது என்று சொன்னதாக சொல்கிறார்கள்.

31-ம் தேதி அரசியல் முடிவை அறிவிப்பதாகச் சொன்னேன். 29-ம் தேதி உங்கள் கொள்கை என்ன என்று கேட்டார்கள். பொண்ணைப் பார்க்கப் போகும் போதே இன்விடேஷன் கேட்டால் எப்படி?

பெரிய பெரிய அரசியல் தலைவர்கள், மேடையில் மக்கள் முன்னால் இதைப்பற்றிப் பேசுகிறார்கள், கிண்டல் செய்கிறார்கள். மக்கள் முன் பேசும்போது மிகவும் எச்சரிக்கையுடன் பேச வேண்டும்.'' என்று ரஜினி பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

வணிகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

இணைப்பிதழ்கள்

9 hours ago

க்ரைம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்