திமுகவில் சீட் மட்டும் தான் உண்டு; நோட்டும் வேண்டுமென்றால் எடப்பாடி பழனிசாமியிடம்தான் செல்ல வேண்டும்: திருமாவளவன் விமர்சனம்

By செய்திப்பிரிவு

சீட் மட்டுமின்றி பணமும் வேண்டும் என நினைத்தவர்களே, அதிமுகவுடன் கூட்டணி வைத்திருப்பதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

விசிக சார்பில் சென்னை கோயம்பேட்டில் நடைபெற்ற சிறு வணிகர் மீட்பு மாநாட்டில் பேசிய திருமாவளவன், "விடுதலை சிறுத்தைகள் கட்சி கொள்கை புரிதலுடன் தான் தேர்தலையும் அணுகுகிறது. திமுகவுடன் விடுதலை சிறுத்தைகள் கைகோர்த்திருப்பது, வெறும் சீட்டுக்காகவும், நோட்டுக்காகவும் (பணம்) அல்ல. நோட்டுக்கு ஒருபோதும் இடம் கொடுக்காத இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். சீட் மட்டும்தான். நோட்டும் வேண்டும் என்றால் எடப்பாடி பழனிசாமியிடம் தான் செல்ல வேண்டும். அதற்காகத்தான் சிலர் அங்கு சென்றுள்ளனர்"

இவ்வாறு தொல்.திருமாவளவன் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்