எடப்பாடி முதல் பிரேமலதா வரை... பட்டப்பெயர் வைத்து பிரச்சாரம் செய்யும் டிடிவி தினகரன்; பட்டையக் கிளப்புகிறார் எனப் புகழும் ஆதரவாளர்கள்

By செய்திப்பிரிவு

தேர்தல் பிரச்சாரம் என்றால் பேச்சுதான் மூலதனம். அந்த அனல் பறக்கும் பேச்சுகள், சர்ச்சைக் கருத்துகள், இலக்கிய மேற்கோள்கள் தெறிக்கும் வாக்கியங்களுக்கு இந்தத் தேர்தலில் என்னவோ பற்றாக்குறை இருப்பதாகவே உணரப்படுகிறது.

ஆனால், எடப்பாடி பழனிச்சாமி முதல் பிரேமலதா வரை எல்லோருக்கும் பட்டப்பெயர் வைத்து பிரச்சாரம் செய்யும் டிடிவி தினகரன், இதுதான் என் ஸ்டைல் என்பதுபோல் ஒரு புதிய ட்ரெண்டை உருவாக்கி வருகிறார்.

அவர் எங்கு பிரச்சாரத்துக்குச் சென்றாலும் எடப்பாடி பழனிசாமியை தியாகி, ஓ.பன்னீர்செல்வத்தை மிஸ்டர் தர்மயுத்தம், பாஜக அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை பயில்வான் என்று பட்டப்பெயர் வைத்தே அழைக்கிறார். மெனக்கிடலுடன் சொல்லப்படாமல் பேச்சின் நடுவே யதார்த்தமான இடைச்செருகலாக வரும் இந்தப் பட்டப்பெயர்களால் கூட்டத்தில் நிற்பவர்கள் சிரித்துவிடுவதாகக் கூறுகின்றனர் அவரின் ஆதரவாளர்கள்.

அதுவும் டிடிவி பிரச்சாரம் செய்யும் இடங்களில் ஓபிஎஸ்.ஸை மிஸ்டர் தர்மயுத்தம் என்று அழைக்கும்போது மட்டும் கூட்டத்தில் ஆரவாரம் அபாரம் என்கின்றனர் டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள்.

மந்திரவாதி, சந்திரமுகி..

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை மந்திரவாதி என்றும் தேமுதிக பொருளாளர் பிரேமலதாவை சந்திரமுகி என்றும் அழைக்கிறார் டிடிவி. தமிழிசை சவுந்தரராஜனுக்கும் பயில்வான் என்றே பட்டப்பெயர் வைத்திருக்கிறார். அதிமுக - பாஜக கூட்டணியை கிண்டலாக மெகா கூட்டணி என்றும் அதிமுகவை எடப்பாடி அண்ட் கம்பெனி என்றும் அழைத்து வருகிறார்.

இப்படி முதல்வர், துணை முதல்வருக்கு எல்லாம் பட்டப்பெயர் வைக்கும் தினகரன் கொங்கு, டெல்டா பகுதி அமைச்சர்களை மட்டும் பெரிதாக சீண்டுவதில்லை எனக் கூறப்படுகிறது.

பிரச்சாரத்துக்கு போலீஸ் போடும் கெடுபிடி, ஆளுங்கட்சியினர் ஏற்படுத்தும் இடையூறுகளுக்கு இடையே டிடிவி துணிச்சலாக எல்லோரையும் பட்டப்பெயர் வைத்து பிரச்சாரம் செய்வது கட்சித் தொண்டர்களை உற்சாகமடைய வைத்திருக்கிறதாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

4 hours ago

இணைப்பிதழ்கள்

4 hours ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

ஆன்மிகம்

6 mins ago

விளையாட்டு

11 mins ago

கருத்துப் பேழை

5 hours ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

மேலும்