அதிமுகவுடன் சமரச பேச்சா?- ஆதீனம் கூறியது ஆதாரமற்றது என்கிறார் டிடிவி தினகரன்

By செய்திப்பிரிவு

அதிமுகவுடன் அமமுகவை இணைப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெறுவதாக மதுரை ஆதீனம் கூறியதை திட்டவட்டமாக மறுத்திருக்கிறார் டிடிவி தினகரன்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "அ.தி.மு.க.வில் இணைப்பதற்காக தினகரனுடன் சமரசப் பேச்சு நடந்து வருவதாக மதுரை ஆதீனம் சொல்லியிருக்கும் கருத்து அடிப்படை ஆதாரமற்றது. அது உண்மையும் அல்ல.. அதற்கு அவசியமும் இல்லை!" எனக் கூறியுள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் எடப்பாடி அணி, ஓபிஎஸ் அணி என அதிமுக இரண்டாகப் பிரிந்தது. மீண்டும் அதிமுகவில் ஐக்கியமாக ஓபிஎஸ் வைத்த நிபந்தனைகளுள் ஒன்று டிடிவி தினகரனை ஓரங்கட்டுவது. அந்த கோரிக்கை ஏற்று செயல்படுத்தப்பட ஈபிஎஸ் - ஓபிஎஸ் அணிகள் ஒன்றாகின.

தனித்துவிடப்பட்ட டிடிவி தினகரன் இணைப்பு வியூகத்தை எல்லாம் முறியடித்து ஆர்.கே.நகரில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். குக்கர் சின்னமும் பிரபலமானது.

அந்த வெற்றியைத் தொடர்ந்து தற்போது மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் முதல் பட்டியலையும் வெளியிட்டுவிட்டார்.

இந்நிலையில்தான் நேற்று மதுரை ஆதீனம், கும்பகோணத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் அதிமுகவுடன் அமமுகவை இணைப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெறுவதாகக் கூறினார்.

இதனை சுட்டிக்காட்டியுள்ள டிடிவி, ஆதீனம் சொல்லியிருப்பது ஆதாரமற்றது எனக் கூறியிருக்கிறார்.

பிறக்காத பிள்ளை..

முன்னதாக, நேற்று சேலத்தில் அமமுக பற்றி பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "அமமுகவை ஒரு கட்சியாகவே நான் நினைக்கவில்லை. அமமுக என்று ஒரு கட்சியை பதிவு செய்திருக்கிறார்களா? பிறக்காத குழந்தைக்குப் பெயர் வைத்ததுபோல அந்தக் கட்சி உள்ளது" என்று விமர்சித்திருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

23 mins ago

வாழ்வியல்

50 mins ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

3 hours ago

ஓடிடி களம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

சினிமா

5 hours ago

மேலும்